திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தி வருகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் புரியும் இரு கட்சிகளும் எவ்வாறு தேர்தல்களில் ஜெயித்து வந்ததது என. தற்போது இரு கட்சிகளின் தலைமை என்பது வெற்றிடமே அதனால் தான் தடுமாறுகிறார்கள்
இதை பயன்படுதுவதற்கு பல கட்சிகள் பல நடிகர்கள் பயன்படுத்தி தமிழகத்தில் பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என எண்ணி கமல் சீமான் அமீர் சூர்யா என அனைவரும் அவ்வப்போது வாய் திறந்து பேசி கிளர்ச்சியை உண்டாக்கும் விதமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.ஆனால் கட்சி விரைவில் தொடங்குவர் என அறிவித்த ரஜினி கப்சிப் இதன் காரணம் தற்போது தான் புரிகிறது ரஜினி கட்சி தொடங்கினால் ரஜினியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ் என்று பலர் கூறி வந்த நிலையில் அதை தவிடுபொடியாகிவிட்டு தமிழக பிஜேபியில் நேற்று இணைந்தார் அண்ணாமலை ஐபிஎஸ்
ரஜினியின் படை தளபதி என அறியப்பட்ட அண்ணாமலையே அதாவது பாஜகவில் இணைந்திருப்பது திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய ஷாக்.
அண்ணாமலை ஐபிஎஸ் பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல்துறை ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கர்நாடகாவில் சிங்கம் என அழைப்பார்கள். பல்வேறு வழக்குகளை திறமையான கையாண்டும், ரவுடிகளை அடக்கி ஒடுக்கியும் திறமையான பணியாற்றியதால், அவரை கர்நாடக சிங்கம் என்றும் அன்போது மக்கள் அழைக்கிறார்கள்.
கரூரில் இவரை தெரியாத இளைஞர்கள் இருக்கமாட்டார்கள் அவரின் செயல்பாடுகள் இளைஞர்களை தனது பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் இந்த அண்ணாமலை.இது ரஜினியின் அரசியலாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். முதலில் தளபதியை பாஜகவில் சேர்ந்து விட்டு தேர்தல் நெருங்கும் வேலையில் ரஜினி பாஜகவில் சேரலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றது. அவ்வாறு இணைந்தால் அடுத்த தேர்தல் பாஜகவின் தேர்தலாகவே இருக்கும். மேலும் திமுகவிலிருந்து அதிக எண்ணிக்கை உடைய எம்.எல்.ஏக்கள் பாஜகவிடம் பேசி வருகிறார்கள். ஏனென்றால் திமுகவே அடுத்த தேர்தலில் வென்றாலும் மத்தியில் இருப்பது பாஜக தானே அதற்கடுத்து எத்தனை வருடம் திமுக ஆட்சியில் இருக்கும் என்பதே கனவு தான் . இதற்கேற்றார் போல் தான் பாஜக தேசிய தலைவரும் தி.மு.கவை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ.க வில் ஆண்ணாமலை ஐக்கியம், இது தி.மு.கவிற்கு நெருக்கடியை கொடுக்கும்.
எனவே தி.மு.கவை வேரறுக்க பா.ஜ.க களமிறங்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது திமுக தன் அரசியல் தேவைக்காக மொழி பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. அதற்காக கனமொழி ஒரு நாடகம் போட்டார்.சென்னை விமான நிலையத்தில், யாரோ ஒருவர் தன்னிடம் ஹிந்தியில் மட்டுமே பேசி, நீ இந்தியரா என கேள்வி கேட்டதாக கனிமொழி சொன்னார் அந்த பெண் அதிகாரி அப்படி பேசவில்லை என சொன்னதும் கனிமொழி கப்சிப், உதயநிதி ஸ்டாலின் இந்து வெறுப்பு கொள்கையை காட்டியுள்ளார் டுவிட்டரில் விநாயகர் களிமண் பொம்மை புகைப்படத்தை வெளியிட்ட கையோடு அது குறித்து பேசும்போது நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என பேசியிருப்பது இந்துமக்களிடையே வெறுப்பை உண்டாக்கியுள்ளது.
திமுக கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கவில்லை, கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சக்திக்கு வாழ்த்து கூறவில்லை எங்கள்கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள் என அடிக்கடி தெரிவிக்கும் திமுக தொடர்ந்து இந்துக்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை பாஜக சுட்டிக்காட்டி வருகிறது. இது தமிழக அரசியலில் புதிய எழுச்சியை உண்டாக்கி உள்ளது.
பா.ஜ.க வின் அடுத்த மூமென்ட் என்ன என்பதை திராவிட கட்சிகள் உற்றுநோக்கி கவனித்து வருகிறார்கள்
மேலும் பாஜகவில் தளபதி இணைந்துவிட்டார் மன்னனும் இணைந்து விட்டால் 45 ஆண்டுகால திராவிட கட்சிகளின் வரலாறை பா.ஜ.க மாற்றி அமைக்கும் என்பதில் ஐயமில்லை! மன்னன் வரவில்லை என்றாலும் பாஜக கால் பதிக்க வாய்ப்புள்ளதாகவே கள நிலவரம் தெரிவிக்கின்றது. நகர் புறங்களை விட கிரமபுரங்களிலில் பாஜகவின் பெயர் சென்றதோ இல்லையோ மோடியின் பெயரும் பயிர் காப்பீடு திட்டமும் விவசயிகளுக்கு 6000 ரூபாய் திட்டமும் சென்றுள்ளது. நகர்புற வாக்காளர்கள் ஓட்டு போடுவார்களா இல்லையோ கிராமமக்கள் ஓட்டு போடுவார்கள் அங்கு பாஜக தனது பணிகளை தீவிரப்படுத்தினால் திராவிட கட்சிகளின் வரலாற்றை எளிதில் மாற்றி அமைக்கும்.