திருச்சி மாம்பழசாலையில் நூறு ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவில் . சாலை விரிவாக்க பணிகளுக்காக இந்த கோவில் அகற்றபட போகிறன்றது என்ற தகவல் வந்த உடனேயே ஶ்ரீரங்கம் பாஜக மண்டல் தலைவர் ஷாலினி அவரகள் தலைமையில் பாஜகவினர் கோவிலை அகற்ற அனுமதிக்க மாட்டோம் , மாற்று இடமோ அல்லது சற்று அருகிலேயோ இந்த கோவிலை இடமாற்றம் செய்து தரப்பட வேண்டும்.
அதுவும் புதிய கோவில் இந்து அறநிலையத்துறை சார்பில் கட்டி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் ஆர்ப்பாட்டம் என முன் எடுத்தது ஶ்ரீரங்கம் மண்டல் பாஜக.இதன் பின் சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்து அறநிலைய துறை அதிகாரிகள், மற்றும் பாஜக சார்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . நடந்த பீஸ் கமிட்டி கூட்டத்தில் பாஜகவின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கோவில் அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் அருகில் இந்து அறநிலையத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட இருக்கின்றது.அது வரை ஆஞ்சநேயர் மூலவர், சத்திரம் அருகிலுள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதற்க்கான பாலாலயம் தற்போது முறைப்படி நடை பெற்றுள்ளது.
தொடர்ந்து இந்துமக்களை சீண்டும் வகையில் அரசு ஏதாவது செய்து வருகிறது. பாஜகவும் போராடி வருகிறது!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















