பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். அதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக இருந்தார்.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது.
2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திரமோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. அதிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக இருந்தார்.
தொடர்ந்து பாரதியஜனதா ஆட்சியில் பல நலத்திட்டங்களை குமரிமாவட்டதிற்க்கு கொண்டு வந்தார் பொன்னார். ஆனால் 2019 தேர்தலில் மத்தியில் பெரும்பான்மையுடன் பாரதியஜனதா ஆட்சி அமைத்தது.
கன்னியாகுமரியில் பாரதியஜனதா தோல்வியை தழுவியது. தொடங்கப்பட்ட திட்டங்கள் அப்படியே கிடப்பில் உள்ளது. சாலைபணிகள் நடைபெறவில்லை. ரயில்வே பணிகள் ஆமைவேகம். தற்போது மீண்டும் கன்னியாகுமரி தொகுதிக்கு இடைதேர்தல் வந்துள்ளது கூடவே மக்களிடையே விழிப்புணர்வும் வந்துள்ளது.
பாரதிய ஜனதா ஜெயித்தால் தான் குமரியில் மக்கள்பணிகள் நடைபெறும் என்பதை குமரிமாவட்ட மக்கள் உணரத்துவங்கியதால் இந்தமுறை குமரியில் தாமரை மலர்வது நிச்சயம்.
எனவே கன்னியாகுமரி பாராளுமன்றம் தாமரையை தேர்வு செய்யும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதற்க்கு நாகர்கோயிலில் நடைபெற்ற குடியுரிமை ஆதரவு போராட்டமும் ஒரு காரணம்.
கட்டுரை :- எழுத்தாளர் சுந்தர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















