‘தமிழை தப்பு இல்லாமல் எனக்கு எழுத தெரியாது”.. உண்மையை ஒப்புக்கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார்..
இது இன்றுகாலை செய்தி தாள்களில் வந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி நடத்திக்கொண்டு அரசுப்பள்ளிகளில் ஹிந்தி படிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்டது என்று பொய் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றன.
பாஜகவின் துணை தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணாமலையும் திமுகவுக்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பதில் கூறிவந்தார் தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்து மோதலில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.. இவர்களுக்கு இடையான விவாத சவால் உரையாடலும் நடைபெற்றது.
இதனிடையே, திமுகவுக்கு செந்தில்குமாருக்கு தமிழ் எழுத படிக்க வராது என்ற ஒரு தகவல்சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது..
இதனை சுட்டிக்காட்டியுள்ள தமிழக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் உண்மையை ஒப்புக்கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.