டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம் ஆகும் நிஜாமுதீன் மார்க்காஸ் ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகும். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தப்லிக் ஜமாத்தினார்களின் சுகாதாரப் பணியாளர்களிடமும், மருத்துவர்கள், காவல்துறையினர் மீது கல் வீசுவது மற்றும் உமிழ்வது நிர்வாகத்தினரிடமும் மோசமாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்தேறியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.87 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 86,961 ஆக அதிகரித்துள்ளது.மேலும் தப்லிக் ஜமாத் தலைவர் மீது கொலை செய்யும் நோக்கமில்லாமல் செய்யப்பட்ட கொலை (culpable homicide) என்ற பிரிவில் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் தப்லிக் ஜமாத் தலைவர் சாத் மற்றும் பிற தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது, வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்துடன் சம்பந்தப்பட்டது என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது
மேலும் அரசின் கட்டுப்பாட்டை மீறி டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாடு தான், நாட்டில் பலருக்கு கொரோனா தொற்று பரவ காரணம் என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.சிவசேனா எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி இதைத் தெரிவித்துள்ளார்.தொற்று பரவிய தகவல் கிடைத்ததும், தப்லீக் ஜமாத் கட்டித்தில் இருந்து 2361 பேர் டெல்லி போலீசால் வெளியேற்றப்பட்டதாகவும், 233 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.இது தொடர்பாக 36 நாடுகளை சேர்ந்த 965 பேர் மீது 59 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.