சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, அவற்றில் போதைப்பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முதல் பார்சலைத் திறந்ததும், பொதுவாக “பிலிப் ப்ளீன்” என அழைக்கப்படும் “பிபி” குரிஈடோடு 105 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மீட்கப்பட்டன.
பார்சல் சென்னை நகரத்தில் உள்ள ஒரு தனி நபரின் விலாசத்திற்கு அனுப்பட்டுள்ளது. விசாரிக்கையில் அந்த விலாசம் போலியானது என்று தெரியவந்துள்ளது. இரண்டாவது பார்சலில் இருந்து 60 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மீட்கப்பட்டன. “ப்ளூ பனிஷர்” என்று அழைக்கப்படும் இந்த மாத்திரைகள் மண்டை ஓடுடன் பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 300 மில்லி கிராம் எம்.டி.எம்.ஏ உள்ளது, இது மிக அதிக அளவு ஆகும். வடகிழக்கு நெதர்லாந்தில் உள்ள ஸ்வோல்லே என்ற நகரத்திலிருந்து இந்தப் பார்சல் வந்துள்ளது. திருப்பூரில் உள்ள ஒரு விலாசத்திற்கு அனுப்பட்டுள்ளது. விசாரிக்கையில் அந்த விலாசம் ஒரு ஜவுளி நிறுவனத்துடையது என்றும் அந்த பெறுநர் பெயர் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.
மொத்தம், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 165 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் என்.டி.பி.எஸ் சட்டம், 1985 இன் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.