தமிழ்நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே ரேசன்’ திட்டத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் மூலம், ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற முடியும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைபடுத்தப்பட்ட இந்த திட்டம், தற்போது தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















