கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் – உம்மா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி இமாம் அலி கடந்த 2002ம் ஆண்டு பெங்களூரில் பதுங்கியிருந்த தீவிரவாதி இமாம் அலியை தமிழக போலீஸ் படையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி, 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவின் தலைவருமான இமாம் அலி இறந்த தினத்தை தமிழ்நாட்டில் கொண்டாடியதற்காக இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இ.ஆருமுக கனி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில் “2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு இதே விளம்பரங்களை இந்திய தேசிய லீக் கட்சி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்த வருடம் நெல்லை பதிப்பகத்தில் வெளியான தினகரன் மற்றும் நெல்லை நாளிதழான தி நெல்லை டைம்ஸ் பத்திரிகையில் இந்த விளம்பரங்களை அவர்கள் வெளியிட்டனர்.
மாநிலம் முழுவதும் இதுபற்றி போஸ்டர் அடித்து ஒட்டியதுடன் நலத்திட்ட உதவிகளும் செய்யப்படும் என்று விளம்பரம் செய்தனர். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாவி மக்களைக் கொல்லக் காரணமான ஒரு பயங்கரவாதியை பிரபலப்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார்கள் அளித்துள்ளோம்.’ என்று கூறப்பட்டுள்ளது.
“செப்டம்பர் 29 அன்று இரத்த தாகம் கொண்ட இமாம் அலியின் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது. தனது தாகத்தைத் தீர்ப்பதற்காக வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்கள் பலரைக் கொன்ற இரத்த தாகம் மிக்க ஒரு தீவகரவாதிக்காக இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது தான் மிகவும் கொடுமையானது.”
இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் என்ன? அவர்கள் தீவிரவாதத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்களா? இந்த நாளில், அதாவது செப்டம்பர் 29 அன்று பெங்களூருவில் நடந்த ஒரு என்கவுண்டரில் பல அப்பாவிகளை கொன்ற குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கூறியுள்ளதைப் போல் இது இளைஞர்களின் விழிப்புணர்வு நாளாக ஏற்பாடு செய்யப்பட்டதா?
இது தமிழகம் பயங்கரவாதிகளுக்கு சொர்க்கமாக மாறி வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திருநேவேலி ‘தினகரன்’, ‘தி நெல்லை டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனவா? பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அதிகாரிகள் அனைவருக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” விஹெச்பி தலைவர் ஆறுமுக கனி என்று கூறினார்.
மேலும் இமாம் அலி முன்னாள் முதலவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் என்கவுண்டர் செய்ததால் அவரை கொல்வதற்கும் திட்டம் திட்டியதாகவும் பாஜக மூத்த தலைவர் அத்வனியை கொல்ல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இவர்களை ஆதரித்து பொதுமக்கள் அன்றாடும் படிக்கும் நாளிதழ்களில் பெருமை படும்விதமாக விளம்பரம் கொடுத்திருப்பதுபத்திரிக்கை யின் நம்பகதன்மையை கேள்வி குறியாக்கி உள்ளது.
தமிழக உளவுத்துறை தூங்குகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.