தமிழகத்தில் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் திமுக அடி வாங்கிய தருணத்தில் முதல் உஷாரான மீடியாக்கள் இந்தி ஏர்போர்ட் என்று தனது வேலைகளை மாற்றுப்பாதையில் துவங்கி விட்டன. கேரளவில் நடைபெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்த குடியேறி தமிழகளின் மரணங்களையும் அங்கே கம்யூனிச ஆட்சியில் நடந்த பாலியல் கொடூரங்களையும் திட்டமிட்டு பேச விடாமல் அமைதி காத்தார்கள் . சொப்னா தங்கம் கடத்தல் செய்திகளை மறக்கடிக்க செய்தார்கள்.
ராஜஸ்தான் பாலியல் சம்பவங்களை பேச மறுக்கிறார்கள் இதையெல்லாம் பேசாத தமிழக கம்யூனிஸ்டுகள் உத்திர பிரதேச நிகழ்வுக்காக ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார்கள். குபீர் போராளிகள் முகநூல் மற்றும் வாட்சப்பில் பொய் செய்திகளை பரப்புகிறார்கள்.
மீண்டும் மீண்டும் நாம் பார்க்க வேண்டியது ஒன்றுதான். அரசியல் செல்வாக்கு பண முதலைகள் ஊழல்வாதிகள் ஆகியோரின் கைப்பிடியில் இருக்கும் ஊடகத்தை வைத்துக்கொண்டு. அவர்களுக்கு தேவையான செய்திகளை திணிக்கிறார்கள். மேலும் எதை மக்கள் மறக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்கிறார்கள்.
இதை சுட்டி காட்டும் நபர்கள் மீது ஒரு மத சாயம் பூசுகிறார்கள். மதம் துவேசத்தால் நடுநிலையான எனக்கு வேலை போய் விட்டது என ஒப்பாரி வைக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் மறுபுறம் அத்தனை அயோக்கியதனங்களை செய்து கொண்டு நேர்மையான தலைவர்கள் இங்கு வந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் அறம் வெல்லும். என்று கருத்து சொல்கிறார்கள்.ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிகூத்தாக்கி வரும் ஊடகங்களை புறக்கணித்து, சோஷியல் மீடியாவை இன்னும் வேகமாக முன்னெடுக்க வேண்டும். அதுவே காலத்தின் தேவையும் கூட.
மேலும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொரோனா தொற்று காலத்தில், தொடர்பான 800 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் ராஜஸ்தானில் இருந்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி வாய்திறக்காத தமிழக ஊடகங்கள் அனைத்தையும் மூடி மறைப்பதற்காகவே 2 ஜி புகழ் கனிமொழியின் வழக்கை திசை திருப்பவும் ஊடகங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை பெரிதாக்கி வருகின்றது.