திமுக 8 ஆண்டுகள் மேல் ஆட்சியில் இல்லை. ஆனால் தினமும் கடத்தல், கொள்ளை , கொலை என்று அனைத்துரவுடித்தனத்தையும் குறையில்லாமல் செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு ஆரம்பித்து கல்லூரி பெண் கடத்தல் வரை அனைத்தையும் துணிந்து செய்வர் இந்த ரவுடிகள்.
தி.மு.கவினருக்கு சோறு பஞ்சாயத்தைத் தவிர உலகில் வேறு பஞ்சாயத்தே இருக்காது போல.
ஓசி பிரியாணி கேட்டு பாக்ஸிங் செய்தது, பஜ்ஜி கடையில் அடாவடி செய்தது என்று உணவகங்களில் போய் தி.மு.க.வினர் ரவுடிசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. பிரியாணி கடையில் ஒரு தி.மு.க. நிர்வாகி ஓசி பிரியாணி கேட்டு பாக்ஸிங் செய்ய, அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்குள்ளானது. பிரியாணிக்கெல்லாம் பாக்ஸிங் போடுவது கட்சி இமேஜுக்கு பெரிய டேமேஜை ஏற்படுத்தியதால், கட்சித்தலைவர் ஸ்டாலினே நேரடியாக பிரியாணி கடைக்குப் போய் மன்னிப்பு கேட்டார். நில அபகரிப்பு, கொள்ளை, ஊழல் என்று ஆரம்பித்து ஓசி பிரியாணி வரை வந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதே வரிசையில், தற்போது லெக் பீஸுக்காக உணவக பணியாளரிடம் குஸ்தி போட்டிருக்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர், தி.மு.க. மாணவர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு அந்த பகுதியில் உள்ள உணவகத்தில், சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து நண்பருடன் உணவகத்துக்கு வந்த கார்த்திக், ‘லெக் பீஸ்’ இல்லை என்று கூறி, உணவக பணியாளரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்துள்ளார். திமுக நிர்வாகியின் திடீர் தாக்குதலால் உணவக பணியாளர் நிலை குலைந்துள்ளார். இந்த தாக்குதலில் அறைவாங்கியவரின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தி.மு.க நிர்வாகி ரவுடிசம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக, விவகாரம் காவல்துறை வரை போனது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கார்த்தியை தேடத்தொடங்க, லெக் பீஸுக்காக சண்டை போட்ட கார்த்தி பயந்துபோய் தலை மறைவாகியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரியாணி கடைக்கு மன்னிப்பு கேட்ட ஸ்டாலின், இதற்கும் மன்னிப்பு கேட்பாரா என்று சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கும் நிலையில் இந்தமாதிரி லெக்பீஸுக்காகலாம் ரவுடிசம் செஞ்சு, தலைவரை கடை கடையா ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வச்சுருவாங்க போல என்று ஆதங்கப்படுகிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்
நன்றி ; நியூஸ் ஜே
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















