நயன்தாரா அம்மனாக நடிக்கும் என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கி நடித்தும், நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’.கொரோனா பாதிப்பால் பட வெளியீடு தள்ளிப்போன நிலையில் இப்போது டிஸ்னிஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரில் நயன்தாரா அம்மனாக கெத்து காட்டி உள்ளார். கூடவே பாலாஜியின் டைமிங் காமெடிகளும் ஆங்காங்கே வருகிறது.
இதில் ஓப்பனிங் ல நோன்பு கஞ்சி குடிப்பேன் புனித அப்பம் ரசிப்ப்பேன் ஆனால் ஆடி கூழ் மட்டும் குடிக்க மாட்டேன் என டயலாக் வருகிறது. இது நேரடியாக ஸ்டாலின் மற்றும் திமுகவை தாக்குகிறது. திமுகவினர் பகுத்தறிவு பேசிக்கொண்டே இஸ்லாமியர் நடத்தும் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிப்பார்கள் கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வார்கள் ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூட தெரிவிக்கமாட்டார்கள்.
”கடவுள் இல்லை என்று சொல்பவன் ஓகே., ஆனால் ஒரு கடவுளை உயர்த்தி, மற்றொரு கடவுளை திட்டுபவன் ரொம்ப டேஞ்சர்”, இது திமுக கூட்டணி கட்சியை குறிவைத்தது போல் அமைந்துள்ளது. திருமாவளவன் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்து மதத்தை மட்டும் குறி வைத்து தரம் தாழ்த்தி பேசிவருவது குறிப்பிட தக்கது அதை மையமாக வைத்து இந்த வசனம் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது போல.
”தமிழகத்தில் மட்டும் தான் மதத்தை வைத்து இன்னும் ஓட்டு வாங்க முடியல, அடுத்த 5 வருஷத்துல அத மாத்தி காட்டுறேன்” போன்ற வசனங்கள் டிரைலரில் இடம் பெற்று இருப்பதன் மூலம் இப்படம் காமெடி, பக்தி இவற்றுடன் சமகால அரசியலையும், இந்து கிறிஸ்டியன் என அனைத்து மதங்களில் இருக்கும் போலி சாமியார்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் இருக்கும் என தெரிகிறது.
தேர்தல் வரும் நிலையில் திமுகவை நேரடியாக தாக்கி ஒரு படம் வெளிவருகிறது என்பது சற்று திமுகவுக்கு கலக்கம் தான் ஆனால் ”தமிழகத்தில் மட்டும் தான் மதத்தை வைத்து இன்னும் ஓட்டு வாங்க முடியல, என சொன்னாலும் அதுவும் திமுகவுக்கு எதிராகத்தான் அமையும். இந்த படமே ஒரு மதம் சார்ந்தது. இந்த படத்தை தடை செய்ய சொல்லி இஸ்லாமிய திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் எதாவது பண்ணாலும் அது திமுகவுக்கு எதிரான நிலையை தான் மக்கள் எடுப்பார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















