சென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் அம்பேத்காரின் அரசியலமைப்பு சட்டம் தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என்று அனைவருக்கும் வேலை வாய்ப்புகளில் பிரதிநிதிதுவம், அரசியல் பிரதித்துவம் என்று பல வழிகளில் சமூக நீதியை நிலைநிறுத்தியுள்ளது. அதே அம்பேத்தகரின் சட்டங்கள் தான் பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒருசில சலுகைகளை வழங்க வழிவகுத்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக நீதி முழுமையாக நிலைநிறுத்த பட்டதா என்றால் அது கால்கிணற்றைக் கூட தாண்டவில்லை என்பதே நிதர்சனம். முழுமை பெற்றிருந்தால் ஜாதியின் பெயரை சொல்லி துன்புறுத்தினால் தீண்டாமை சட்டம் பாய்வதைப் போன்று, இந்நேரம் வழக்கு பாய்ந்திருக்க வேண்டும் சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஒருவரை ஜாதியை சொல்லி அவமான படுத்துவதிலும், உடற்குறையை சொல்லி அவமதிப்பதிலும் என்ன ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. சட்டங்களில் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வு.
இதையெல்லாம் கேட்க வேண்டிய இடம் பாராளுமன்றம் என்றால், அங்கும் அதற்காக குரல் கொடுக்க எந்த பிரதிநிதியும் இல்லை. சுதந்திரம் அடைந்து 70 வது வருடங்களை கடந்த பிறகும் நாட்டில் 2 லட்சதுக்கும் குறைவாக இருந்த ஆங்கிலோ இந்தியருக்கு கொடுக்கப்பட்டு வந்த 2 பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கூட, 2 கோடி மாற்றுத்திறனாளிகளை கொண்ட சமூகத்துக்கு மறுக்கப்பட்டு வருகிறது என்பதே வரலாறு.
ஆனால் பதவியேற்று பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, சமீபத்தில் ஆங்கிலோ இந்தியருக்கு பிரதிநிதித்துவம் தேவையில்லை என்று உணர்ந்து தூக்கியதை போன்று, மாற்றுத்திறளிகளை திவ்யாங் ஆதாவது இறைவனின் பிள்ளைகள் என்று கொண்டாடும் மத்திய அரசு, அந்த துறைக்கு என்றும் இல்லாத அளவாக பல கோடிகளில் உபகரணங்களுகான நிதியை ஒதுக்கி வரும் அரசு. அவர்களுக்கான பிரதிநிதித்துவ தேவையை உணர்ந்து நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுள்ளது.
ஆனால் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்கும், பேச்சுக்கு பேச்சு சமூகநீதியை பேசும் திருமாவளவன், மாற்றுத்திறனாளிகள் எனும் மதங்களை கடந்த சமூகத்தை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இதை அவர் வார்த்தை பிறழ்வு என்கிறார், அது வார்த்தை பிறழ்வு அல்ல மனப்பிறழ்வு.அவரது சமீபத்திய சர்ச்சை பேச்சுக்கள் அதைத்தான் காட்டுகிறது.. மனப்பிறழ்வு அடைந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கூட இருக்க தகுதி அற்றவர்கள் என்பதை அவர் உணர வேண்டும். தீண்டாமை சட்டங்களுக்கு நிகராக அவர் மீது நடவடிக்கை பாய வேண்டும்.
நன்றி; தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















