டெக்கான் ஏர் கோபிநாத் என்பவர் இந்தியாவில் குறைந்த விலை கட்டண விமானத்தை தொடங்கியிருக்கலாம் ஆனால் திட்டம் அவருடையது அல்ல
அதை முதலில் சொன்னது பசிபிக் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், அதுவும் 1949லே சொன்னது
ஒவ்வொரு மனிதனும் பறக்க வேண்டும் என முதலில் கனவு கண்ட நிறுவணம் அதுதான்
ஆம் விமானபயணம் என்பது மிகபெரும் பணக்காரர்களுக்கானது என கருதபட்ட காலம் அது, அது உண்மையும் கூட 1980க்கு பின்புதான் விமானத்தில் மேல்நடுத்தரவர்க்கமே கால் வைக்க முடியும் அதுவரை அது மிக பணக்கார வஸ்துவே
ஆனால் 1949லே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்தது பசிபிக் சவுத்வெஸ்ட்
ஆனால் பெரிதாக கைகூடவில்லை
1970களில் சிந்தனை மாற தொடங்கியது, அமெரிக்காவில் உள்நாட்டு விமானங்கள் காய்கறி சந்தை தொட்டி ஆட்டோ போல, தமிழக பஸ்டாண்ட் ஷேர் ஆட்டோ போலவும் பறக்க ஆரம்பித்தபொழுது அந்த சிந்தனை மேலோங்கிற்று
விமானத்தின் பெரும் செலவு உணவு, பணியாளர்கள், மற்றும் பயணிகள் கொண்டுவரும் எடை போன்றவற்றில் இருப்பதை கண்டறிந்த அறிக்கைகள் சலுகைகள் கொடுக்க ஆரம்பித்தன
எம்மிடம் டிக்கெட் குறைவுதான் ஆனால் லக்கேஜ் 10 கிலோ, சாப்பாடு கிடையாது, தண்ணீர் கூட கிடையாது விருப்பமென்றால் வாருங்கள் என அழைப்பு விடுத்தன
இது குறுகிய தூர பயணங்களுக்கு பெரிதும் கைகொடுத்தது
அதை இன்னும் பிசினஸ் மூளையில் சிந்தித்தார்கள்
அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே டிக்கெட் வாங்கினால் நம்ப முடியா விலையில் கொடுத்தார்கள், அப்பொழுது வசூலாகும் பணம் கொஞ்சம்தான் அதை பங்குசந்தை அல்லது இதர முதலீட்டில் போட்டு பணத்தை அள்ளி இதில் சமாளித்தார்கள்
இதில் லக்கி குலுக்கல் என இலவச பயணமெல்லாம் அறிவித்தார்கள் இன்னும் ஏகபட்ட புள்ளி கணக்கெல்லாம் உண்டு
விமான நிலைய வரி மட்டும் கட்டுங்கள் போதும் எனும் அளவில் பயணிகள் வரவேற்கபட்டனர், இது தொழில்முறை முதல் சுற்றுலா வரை மக்களுக்கு கைகொடுத்தது
இப்படித்தான் பட்ஜெட் விமானங்கள் வளர தொடங்கின
நிச்சயம் இது வசதியான விமானமாக இருக்காது, குடிநீர் கூட காசு கொடுத்தால்தான் கிடைக்கும் உணவும் அப்படியே, ஆனால் விலைகழிவு நம்பமுடியா அளவு அதிசயம் ரயிலை விட சில நேரங்களில் குறைவு
உலகெல்லாம் இந்த புதிய பிசினஸ் 1980களிலே வந்தது. பைலட்டுகள் பெருக விமான சிப்பந்திகள் பெருக, போயிங்கும் ஏர்பஸ் நிறுவணமும் வகைவகையாக விமானங்களை தயாரித்து கொண்டே இருக்க இவை பெருகின
நிச்சயம் டெல்லி டூ நியூயார்க் போன்ற தொலைதூர விமானங்களுக்கு இது சரிவராது, பயணிகள் உடமையும் உணவும் அவர்களுக்கு தவிர்க்க முடியாதது இது போக அளவில் பெரிய சாவகாசமாக கால் நீட்டி அமர பெரும் விமானம் அவசியம் செலவு அதிகம்
ஆனால் குறுகிய தொலைவுக்கு அவசியமல்ல
ஆம் சென்னை டூ கன்னியாகுமரி என்றால் டீலக்ஸ் பஸ் ஒன்றே வழி அதுவே நெல்லை டூ கன்னியாகுமரி என்றால் மினிபஸ்ஸோ டவுண்பஸ்ஸோ போதும்
இதில் இருந்துதான் சிந்தனை உதித்து வர்ஜினியா அட்லாண்டிக் நிறுவணம் இதை பரீட்சயித்து பார்த்தது அப்பொழுது அதில் ஒரு மேனேஜராக இருந்தவர்தான் டோனிபெர்ணாண்டஸ்
அவர் பின் மலேசியா திரும்பி இங்கு சிலர் பரிட்சயித்த லோ காஸ்ட் விமானங்களை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்
கடந்த 15 ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் லோ காஸ்டு விமானம் அதுதான்
ஆம் பணக்காரர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் போன்ற பெரும் சொகுசு விமானம் ஏழைகளுக்கு உணவும் குடிநீரும் இல்லா டவுன் பஸ் விமானங்களும் 1949களிலே இருந்த கனவு
இதுதான் பின்னாளில் ஆங்காங்கே வென்றது, சில இடங்களில் பரிசீலிக்கபட்டது
இவை வந்தபின்புதான் நீண்ட தூர விமான நிறுவணம் மட்டும் தாக்குபிடித்தது , ஏர் இந்தியா போன்றவை காணாமல் போயின, ஜெட் ஏர்வேஸ் தடம் புரண்டது
எண்ணெய் வள அரபு விமான நிறுவணம் மட்டும் தாக்குபிடித்தன
இந்தியாவில் இது சமீபமாகத்தான் வந்தது அதை கோபிநாத் செய்திருக்கலாம், அது சுதா கொங்கராவின் படமாக வந்திருக்கலாம்
மற்றபடி இந்த வரலாறு நீண்டது, வெற்றிபெற்றோரும் விழுந்தோரும் ஏராளம், உலக அளவில் இது தமிழக அரசியல் போல் சுவாரஸ்யமானது
அதற்காக கோபிநாத் ஒருவர்தான் இதை திட்டமிட்டார், உருவாக்கினார் போராடினார் என்பதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியா விஷயம்
தமிழ் சினிமாவுக்கு இது புதிதாக இருக்கலாம் அவ்வளவுதான்.
கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















