டாக்டர் பூங்கோதையின் தற்கொலை முயற்சி நேற்று தமிழகத்தையே புரட்டி போட்ட சம்பவமாக்கிவிட்டது.
விஷயத்துக்கு ஒரே காரணம் திமுக தலமையின் பக்குவற்ற அணுகுமுறையும் அக்கட்சியின் உட்கட்சி பூசலும்
இந்த விவகாரம் வித்தியாசமானது, தென்னகத்தில் என்ன மர்மமோ தெரியாது பிரபல அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆண் வாரிசுகள் சொதப்பிவிடும் பெண் வாரிசுகளே நிலைக்கும்
மதுரை மீனாட்சியின் மண் என்பதால் என்னமோ, அதுதான் அங்கு நடக்கின்றது
பெரியசாமி மகள் கீதா ஜீவன், தங்கபாண்டியர் மகள் தமிழச்சி, ஆலடி அருணா மகள் பூங்கோதை எல்லாம் அப்படி வாரிசாக வந்தவர்களே, கட்சி தாண்டி பாஜகவின் தமிழிசை அக்கா வரை இந்த ராசி உண்டு
இப்படி பெண் வாரிசுகளுக்கு கைகொடுக்கும் பூமியினை கருணாநிதி விடுவாரா? தன் மகளை அங்கே அனுப்பி வைத்து பல்ஸ் பார்த்தார், அவர் காலத்துக்கு பின் “என் தாய் நாடார்” என புகுந்துவிட்டார் கனிமொழி
கனிமொழியின் வரவு ஒருமாதிரியான உட்கட்சி பூசலை கொடுத்தது, தென்னகம் ஸ்டாலினார் அணி கனிமொழி அணி என பிரியவில்லை என்றாலும் அப்படி காட்சிகள் நடந்தன
மிக உச்சமாக நெல்லையின் சாதி பின்னணி இதில் அழகாக வெடித்தது, நாடார் திமுகவினருக்கு திரும்பும் இடமெல்லாம் பதவியா என கொதித்தன சில சமூகம்
இப்படியே குழப்பம் மிஞ்சி கொண்டிருக்க பழனிச்சாமி தென்காசியினை தனி மாவட்டமாக்கினார்
இப்படி அரசு ஆவணபடி ஆக்கினால் மனதளவில் தமிழகத்தை ஆளும் திமுகவும் பிரிக்க வேண்டும் அல்லவா? இதனால் மாமன்னர் திருகுவளை இளவரசர் சில சீர்திருத்தங்களை செய்தார்
விளைவு வெடித்தது
உதயநிதியினை அடுத்த தலைவராக்கி பார்க்கும் ஆசையில் இருக்கும் ஸ்டாலின் வழியில் யாராவது குறுக்கே வந்தால் விடுவார்களா? அதுதான் பூங்கோதைக்கும் நடந்தது
பயங்கர ஆட்டங்கள் நடந்திருக்கின்றன ஒரு கட்டத்தில் ஒரு கோஷ்டி என்ன பெரிய திமுக? பணம் வெட்டினால் அங்கே சீட் மற்றும் மரியாதை என மிக அகங்காரமாக ஆடியதில் பூங்கோதையும் வலுத்து பிடித்திருக்கின்றார்
என்ன இருந்தாலும் பூங்கோதை கட்சிக்கு சீனியர், கனிமொழிக்கு முன்பே திமுக மகளிர் அணியின் தூணாக இருந்தவர் , அவர் காண வளர்ந்தவர் உதயநிதி
நிச்சயம் தென்னகத்தில் மிக பெரிய அனுபவமும் முன்னுரிமையும் கொண்டவர் பூங்கோதை அதில் சந்தேகமில்லை
ஆனால் கட்சியின் உட்கட்சி குழப்பங்கள் எல்லை மீறி நிற்கின்றன, பணம் இருப்போர் எதையும் சாதிக்கும் நிலைக்கு வந்தாயிற்று
அணி அணியாக செயல்படுகின்றார்கள், தேர்தல் நெருங்க நெருங்க அது அதிகமாகின்றது
அவர் அந்த அணி இவர் இந்த அணி இவர் காசுள்ள அணி என பிரிந்து மோதுவதில் நிலைகுலைந்து வீழ்ந்து கிடக்கின்றார் பூங்கோதை
பூங்கோதை நேற்று ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து அழும் காட்சி மனதை உருக வைத்தது
ஆம் அக்கட்சிக்கு நிழலாய் நின்ற ஒருவனின் மகள், அதுவும் நீண்ட காலம் உழைத்த ஒரு பெண்மணி, நிச்சயம் எம்பியாய் பதவி உயர்வுடன் எங்கோ உயர இருக்க வேண்டிய பெண்மணி அதுவும் டாக்டர் ஒரு வார்டு பூத் கமிட்டி பிரச்சினையில் கண்டவன் காலில் விழுவதெல்லாம் எதை காட்டுகின்றது?
திமுகவில் பணமும், அது கொடுக்கும் அதிகாரமும், ஒரு குடும்பமும், அக்குடும்பத்தின் பல சாதி எல்லா சாதிகளிலும் நுழைந்து அரசியல் செய்கின்றது செய்கின்றது என்பது தெரிகின்றது
அது முன்னாள் தலைவன் மகளை, முன்னாள் அமைச்சரை, ஒரு எம்.எல்.ஏவினையே கதற வைக்கின்றது என்றால் நிலமையின் வீரியம் என்ன?
ஒரு பெண்ணை அதுவும் கட்சியின் அதிசீனியர் பெண்ணை கதறவைத்துவிட்டுத்தான் பெரியாசிசம், பெண் விடுதலை, இந்துமதம் பெண் அடிமைதனம் என பேசிகொண்டிருக்கின்றது அக்கும்பல்
பெண்ணுரிமை போராளி பெரியாரிஸ்டுகள் வீரமணி, சுபவீ, சகோதரி அருள்மொழி இப்பொழுது வாயை திறக்கட்டும் பார்க்கலாம்?
ஒரு பெண்ணுரிமை போராளி பேசுவார்கள்? திருமா பேசுவாரா? நிச்சயம் மாட்டார்
மனுதர்மம் எங்கே இருக்கின்றது? நிச்சயம் அறிவாலயத்தில்தான் இருக்கின்றது
சரி, அனிதா என்றதும் குழிக்குள் சிறுவன் விழுந்தான் என்றதும் சாத்தான்குளம் என்றதும் ஓடிய கருணாநிதி குடும்பம் இப்பொழுது அமைதி ஏன்?
உழைத்த கட்சிக்காரி செத்தால் வரமாட்டார்கள் ஆனால் எங்கோ யாரோ என்றால் ஓடுவார்களா?
தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேரை தன் சொந்த நலனுக்காக பலிகொடுத்த கட்சி இப்பொழுது பூங்கோதையின் கழுத்தையும் நெறிக்கின்றது
இது அதிர்ச்சியுமல்ல, ஆச்சரியுமல்ல அவர்கள் இயல்பு.
இப்பக்கம் மிக மூத்த கட்சி பெண்மணியினை தெருவில் திமுக கதற வைக்கின்றது, அப்பக்கம் பாஜக பெண்களை கவர்னராக, நிதி அமைச்சராக, கட்சி தலைவராக இன்னும் பல கவுரவமான பொறுப்புகளை கொடுத்து உயர்த்துகின்றது
எங்கே இருக்கின்றது பெண் சுதந்திரம், எங்கே இருக்கின்றது பெண் அடிமைதனம் என்பதை இனியும் விளக்கி சொல்ல அவசியமில்லை
சகோதரி பூங்கோதை, தென்னக அடையாளம், பாரதி கண்ட பெண்விடுதலையின் முகம். அவர் விரைவில் நலம்பெற்று வர பிரார்த்தனைகள்
குற்றால நாதனும் , தென்காசி நாதனும், நெல்லையப்பரும் திருசெந்தூர் முருகனும் அவருக்கு நலம் அருளி மீட்டு வரட்டும்..
கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்