நீங்கள் இப்படி பேசுவது தான் அதிர்ச்சிஅளிக்கிறது..
இடதுசாரிகள்ஆளும் எந்த இடத்திலும் கருத்து சுதந்திரம் ஜனநாயகம் இதெல்லாம் கிலோ என்ன விலை? என்று தான் மக்கள் கேட்பார்கள்.
ஆனால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஒரு உயிரை காப்பாற்ற அதாவது பசு பாதுகாப்பு என்று சட்டம் கொண்டு வந்தா ல் என் தட்டு என் உணவு அதை கேட்க நீ யார்?என்று நியாயம் பேசுவார்கள்.
கேரளாவில் சமூக வலை தளங்களில் பினராய் விஜயன் பற்றியும் அவருக்கு தங்க கடத்தல் போதை பொருள் கடத்தல் கும்பல்களுடன் உள்ள தொடர்பு பற்றியும் இன்றைய இளைஞர்கள் எழுதி வருகிறார்கள்.
இதை தடுக்க சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளை பரப்பினால் 5 வருடம் சிறைத்தண்டனை என்று சட்டம் கொண்டு வந்து
இருக்கிறார்.பினராய் மீது ஏற்கனவே லாவ்லின் ஊழல் வழக்கு இருக்கிறது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அச்சு தானந்தன் தான் முதல்வர் என்று கூறி வெற்றி பெற்ற பிறகு அச்சுதானந்தன் அவர்களை ஏமாற்றிவிட்டு பினராய் விஜ யனை கொண்டு வந்து விட்டார்கள். சும்மாவே கேரளா அரசியலில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம்ஏற்பட்டு விடும்.
இந்த நிலையில் வரிசையாக அவர் மீது வந்து விழும் குற்றச் சாட்டுகளினால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பினராய் விஜயனுக்கு மரண அடி கிடைக்க இரு க்கிறது.
பிஜேபி கேரளாவில் இப்பொழுது அமைதியாக இருக்க காரணமே வாக்குகள் பிரிந்து மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்கு தான்.
கேரள அரசியலில் மிக மோசமான அரசியல்வாதி கேரள ஆட்சியில் இருந்த மிக மோசமான முதல்வர் பினராய் விஜயன் தான்..
காமெடி என்னவென்றால் கேரளாவில் இடதுசாரிகளை ஊழல்வாதிகள் என்று காங்கிரசும் காங்கிரசை ஊழலின் ஊற்று கண்கள் என்று இடதுசாரிகளும் ஒருவரை யொருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி கொண்டு வரிந்து கட்டி சண்டை போட்டு நிற்கிறார்கள்.
ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரசும் இடது சாரிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்.
இவர்களுக்கு பதவியை தவிர வேறு என்ன கொள்கை இருக்க முடியும்?