மும்பை தீவிரவாதத்தின் கோர முகத்தை அன்று கண்டது.இந்தியாவின் பொருளாதார நகரத்தின் மீது விழுந்த அடி என்பதால் உலகமே உற்று நோக்கியது. 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள்கொடூர தாக்குதல் நடத்தி 166 பேர் இரையாகினர். 320 பேர் படுகாயமடைந்தனர். மும்பை தாக்குதல்’ நடந்து இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது,
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட, 10 பயங்கரவாதிகளில், ஒன்பது பேர் கொல்லப் பட்டனர். பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், பின்னர் துாக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதலில் நெருங்கிய தொடர்புடைய, 11 பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் இருப்பதாக, பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
மும்பையில் குண்டு வெடிப்பு என்பது அரிதான விசயம் அல்ல.ஆகஸ்டு 2003ல் தெற்கு மும்பை பகுதியில் இரண்டு குண்டுகள் மும்பை கேட் பகுதியில் வெடித்ததில் 44பேர் கொல்லப்பட்டனர்.150 பேர் காயமடைந்தனர்.ஜீலை 2006ல் சபர்பன் ரயில் நிலையம் அருகே 11 நிமிடத்திற்குள் ஏழு குண்டுகள் வெடித்ததில் 209பேர் கொல்லப்பட்டனர்.அதில் 22 பேர் வெளிநாட்டவர்.700 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதல் பாக்கின் லஷ்கர் மற்றும் இந்தியாவின் சிமி தீவிரவாத குழுக்களால் அறங்கேற்றப்பட்டது. 2008 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எப்படி??
மும்பை 2008 தாக்குதலை அறங்கேற்ற இளைஞர்கள் தீவிரவாத குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.24 முதல் 26பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாக்கின் முசாபராத்தில் உள்ள தனித்த மலையில் இருந்த கடற்படை வீரர்கள் போர்பயிற்சி பெரும் இடத்தில் பயிற்றுவிக்கப்பட்டனர்.மேலும் மங்ளா டேம் ரிசர்வ் பகுதியிலும் பயிற்சி பெற்றதாக தகவல்கள் கூறுகிறது.
இந்திய மற்றும் அமெரிக்கா மீடியாக்களின் கூற்றுப்படி தீவிரவாதிகள் கீழ்க்கண்ட பயிற்சிகளை பெற்றனர்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாவதாகவும்,செச்ன்யா,பாலஸ்தீன் மற்றும் உலக அளவில் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என அந்த தீவிரவாதிகள் நம்ப வைக்கப்பட்டனர்.இந்த பயிற்சி அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த பயிற்றுவிக்கப்பட்டது.
லஷ்கர் தீவிரவாதிகளின் அடிப்படை போர் பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.ஆயுதங்கள் கையாள்வது போன்றவை.நவீன பயிற்சி: டவுரா காஸ் என லஷ்கர்கள் அழைக்கும் நவீன பயிற்சி தீவிரவாதிகளுக்கு மானெஷரா தளத்தில் வழங்கப்பட்டது.அமெரிக்காவின் கூற்றுப்படி தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்கள் கையாள்வது,வெடிபொருள்களை கையாள்து போன்றவற்றை ஓய்வு பெற்ற பாக் இராணுவ வீரரின் மேற்பார்வையில் நடைபெற்றதாக கூறியுள்ளது.மேலும் உயிர்பிழைத்திருத்தல் போன்ற இராணுவ பயிற்சிகளும் வழங்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் மிகச் சில பேரே கமாண்டாே பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.சிறப்பு கமாண்டாே பயிற்சி,தந்திரோபாய பயிற்சி, கடல் வழிகண்டுபிடிப்பு பயிற்சி போன்ற பயிற்சிகள் பிதாயின்களுக்கு (தற்கொலை தீவிரவாதிகள்) வழங்கப்பட்டது.அனைத்து பயிற்சிகளும் மும்பையை தாக்குவதை மையப்படுத்தி நடத்தப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 10பேர் மட்டும் மும்பை தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நீச்சல் பயிற்சி,படகோட்டும் பயிற்சி,லஷ்கர் கமாண்டர்களின் மேற்பார்வையில் நவீன ஆயுதங்களைை கையாள்வது போன்ற பயிற்சிகளை பெற்றனர்.
இவர்களுக்கு பாக் இராணுவ அதிகாரிகளும் மற்றும் பாக்உளவுத் துறையான ஐஎஸ்ஐ அதிகாரிகளும் அனைத்து உதவிகளையும் செய்தனர்.அவர்கள் தான் மும்பையில் தாக்கும் இடங்களைப் பற்றியான முழு தகவலையும் அளித்தனர்.