இதில் பாதி உண்மை இருக்கலாம் என்கின்றார்கள், ரஜினியின் பட அறிவிப்பு தவிர எல்லாம் ஒருவித ரகசியமானவை என்பதால் அவராக அறிவிக்கும் வரை நம்ப முடியாது
ஆம், ரஜினி வியாழகிழமை விரும்புபவர் அதாவது அவருக்கு ராசியான நாள் அது. வியாழன் என்றால் குரு பகவான் அவருக்கு உகந்தது மஞ்சள் நிறம்
இன்னொரு பக்கம் மாம்பழம் என மஞ்சள் நிறத்தில் ஒரு சின்னம் வைத்து தன்னோடு மோதிய ராமதாஸ், மஞ்சள் நிற சால்வை அணிந்தே ரஜினிக்கு குழி தோண்டிய கருணாநிதி என பல மஞ்சள் அரக்கர்கள் மேல் ரஜினிக்கு மனதுக்குள் ஒரு வன்மம் உண்டு
இதனால் பல கணக்குகளை போட்டு மஞ்சள் நிற சின்னம் தேடியிருக்கலாம், அதில் ஆட்டோ வசமாக சிக்கியிருக்கலாம். ஏற்கனவே அவரின் ஆட்டோக்காரன் வேடம் பட்டையினை கிளப்பிய ஒன்று
இதனால் ரஜினி கட்சிக்கு ஆட்டோ சின்னமாக இருக்க வாய்ப்பு அதிகம்
ரஜினி கட்சிக்கு ஆட்டோ சின்னம் என கேள்விபட்டவுடன் அவசரமாக வள்ளியூர் ஆட்டோ நிறுத்தத்தில் நின்ற ஆட்டோ ஒன்றை சில நொடிகளில் வாங்கி, அதில் முன்னால் பின்னால் “மக்கள் சேவை கட்சி”, “ரஜினி பெயரை சொன்னால் இலவசம்” என்றெல்லாம் அவசரமாக எழுதி கொண்டிருந்தான் Shanmugam Arumugamஎன்பவன்
அத்தோடு ஆட்டோ டிரைவரின் உடையினை கத்தி முனையில் கழற்றி வந்து அதை அணிந்து கொண்டு “நான் ஒரு ஆட்டோ வாங்கினா நூறு ஆட்டோ வாங்குன மாதிரி” என கம்பீரமாக சொல்லியும் கொண்டான்
ஆனால் ரஜினி தரப்பு முறையான அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என சொன்னதை அடுத்து வைக்கோல் படப்புக்குள் அந்த ஆட்டோவினை ஒளித்து வைத்து ஒன்றுமே தெரியாதது போல் அமைதி காக்கின்றான் அந்த உண்மையான ரசிகன்..
இனி ஒருவேளை சின்னம் மாறினால் அது லாரி, பஸ் என்றானால் அவன் பாடு கொஞ்சம் சிக்கல்தான்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















