பொன்னி அரிசி என்பது எல்லோர்களாலும் விரும்பி சாப்பிடக் கூடிய அரிசி ஆகும். பொன்னி அரிசிக்கு தென்கிழக்கு நாடுகளில் மிகுந்த கிராக்கி உள்ளது. போதிய அளவில் அங்கு கிடைக்காதலால் அங்கு பொன்னி அரிசிக்கு கடும் தட்டுபாடு உள்ளது. ஆனால் இந்தியாவில் அத்தியாவசிய சட்டத்தில் அரிசி உள்ளதால் நாம் ஏற்றுமதி செய்ய முடியாது அவர்களும் பொன்னி அரிசியை இறக்குமதி செய்ய முடியாது. மேலும் பொன்னி நெல் ஏக்கருக்கு 20 மூட்டை குறைவாக விளைவதால் விவசாயிகள் அதை பயிர் செய்வது குறைந்து விட்டது.
இந்த புதிய வேளாண் சட்டத்தின் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் இங்கு வந்து பொன்னி நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுடன் ஒப்பந்தம் போடுவார்கள். வெளிநாட்டில் பொன்னி அரிசிக்கு இருக்கும் தட்டுபாடால் விவசாயிகளிடம் குறைந்த பட்சம் ஒரு மூட்டை நெல் 2500 ரூபாய் வரை வாங்குவார்கள் இது கூட குறைந்தபட்சம் தான்.
அப்பொழது விவசாயிகள் வரிந்து கட்டிக் கொண்டு பொன்னி நெல் சாகுபடி செய்வார்கள். இதேமாதிரி மஞ்சள் விலை வெளிநாடுகளில் எக்கச்சக்க விலை விற்கிறது இலங்கையில் ஒரு கிலோ 600ரூபாய் வரை மஞ்சள் விற்கிறது. உள்ளூர் சந்தையை வைத்துத்தான் இத்தனைகாலம் நாம் விவசாயம் செய்து வருகிறோம் இந்த புதிய வேளாண் சட்டத்தில் நாம் வெளிநாட்டு சந்தையில் விற்று விவசாயிகள் இலாபம் பார்க்கலாம்.
இந்த புதிய வேளாண் சட்டம் அமலாகும் பொழது அரசியல்வாதிகள் உண்ணாவிரத்தை மேற்கொள்வார்கள் காரணம் இங்கு அரிசி விலை உயர்ந்து விட்டது அதனால் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள் என்று உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால் அன்று தோளில் பச்சைத்துண்டு இருக்காது.
விவசாயிகள் எத்தனை காலம்தான் உங்களுக்கு கிலோ 50 ரூபாய்க்கு பொன்னி அரிசி கொடுப்பது. நாங்கள் கிலோ 150க்கு அரிசி விற்க வேண்டாமா. நாங்களும் பஞ்சாப் விவசாயிகள் போல் வசதியான வாழ்க்கை வாழ வேண்டாமா.