‘அக்சென்சர்’ எனும் நிறுவனம் இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடானது சென்ற ஆண்டில், மட்டும் 2019ல் 26 ஆயிரத்து, 270 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவும் இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் அதாவது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம். இந்த நிலையில் , உலக அளவில் , மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்ப சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் , 198 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த, 2018 ஆம் ஆண்டு இது, 193 ஆக இருந்தது. பணப் பரிமாற்ற நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், கடந்த ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த, 2018 ஆம் ஆண்டில், இப்பிரிவில், 4,686 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதுவே, கடந்த ஆண்டில், 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
காப்பீடு தொழில்நுட்பத்தில், கடந்த ஆண்டில் முதலீடுகள், 74 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையில், பணப் பரிமாற்ற நிறுவனங்களில், 58 சதவீத அளவுக்கும், காப்பீடு தொழில்நுட்பத்தில், 13.7 சதவீத அளவுக்கும், முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.