திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (6-ஆம் தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் AIIM என்ற மதவெறி கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்கிறார் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
AIIM கட்சியின் தலைவர்கள் ஒவைசி சகோதரர்கள். அசாதுதீன் ஒவைசி. இவர் எம்பியாக உள்ளார். இவரது சகோதரர் அக்பரூதின் ஒவைசி. இவர் எம்எல்ஏவாக உள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவு நிலைபாடும், மதரீதியாக இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிளவு படுத்துவதுமே AIIM கட்சியின் பிரதானக் கொள்கை. இதற்காக இந்துக்களை இழிவுபடுத்தியும், முஸ்லிம்களிடம் மதவெறியை தூண்டியும் வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், “நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் இருக்கிறோம். ஒரு 15 நிமிடம் காவல்துறையினரை அப்புறப்படுத்துங்கள். 100 கோடியாக இருக்கும் ஹிந்துக்களை எங்கள் எண்ணிக்கையைவிட குறைத்து காட்டுகிறோம்” என்று அறைகூவல் விடுத்தார்கள். அதாவது 15 நிமிடம் காவல்துறையினரை விலக்கிக் கொண்டால், மொத்த ஹிந்துக்களையும் அழித்துவிடுவோம் என்றார்கள்.
அப்படிப்பட்ட மதவெறியின் ஊறிப்போன கட்சியின் தலைவரைதான், முதலமைச்சர் பதவி வெறியில் ஊறிப்போன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைத்திருந்தார்.
எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முஸ்லிம்களின் ஓட்டுக்களை மொத்தமாக வாரி சுருட்டுவதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.
இந்த திமுகவின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் பெயர்தான் மதசார்பற்ற கூட்டணி. இதுதான் உச்சபட்ச நகைச்சுவை.
இந்த நிலையில் அசாதுதீன் ஓவைசியை திமுகவின் நிகழ்ச்சிக்கு அழைத்த தகவல் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியது. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவிய உடனேயே, தமிழகத்தில் உள்ள இந்துக்கள் கொதித்து எழ ஆரம்பித்து விட்டார்கள். திமுகவில் உள்ள இந்துக்கள் உள்ளத்தில் குமுறிக் கொண்டு இருந்தார்கள்.
இதுதொடர்பாக, சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான கண்டனங்கள் எழுந்தன. நிச்சயமாக இது திமுகவிற்கு மிகப்பெரிய அடியை தேர்தல் நேரத்தில் கொடுக்கும் என்பது வெளிப்படையாக உணரப்பட்டது. திமுகவில் உள்ள இந்துக்களும் இந்த முறை, மு.க.ஸ்டாலினின் இந்து விரோத செயல்பாடுகளால் ஏற்கெனவே கோபமடைந்து உள்ளார்கள். அவர்கள் தங்களின் கை வண்ணங்களை வாக்குச் சீட்டில் காண்பிக்க தயாராகிவிட்டார்கள்.
அசாதுதீன் ஓவைசியை அழைத்ததன் மூலம் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஓட்டுக்களையும் பெறலாம் என்று நினைத்த மு.க..ஸ்டாலினுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுகவுக்கு கிடைக்க உள்ள ஓட்டும் நழுவி விடும் என்பதை உணர்ந்த ஸ்டாலின், உடனடியாக ஓவைசி வரவேண்டாம் என்று கேட்டு ஹைதராபாத்துக்கு ஆள் அனுப்பினார். மு.க.ஸ்டாலினின் அந்த பிரதிநிதி, ஓவைசியின் ஹைதராபாத் இல்லத்திற்கு சென்று அவரின் காலை பிடிக்காத குறையாக கெஞ்சியுள்ளார். அவரும் காறி துப்பாத குறையாக அந்த நபரை திருப்பி அனுப்பி உள்ளார்.
இந்த சம்பவங்களை மூடி மறைப்பதற்காக மற்றொரு பித்தலாட்டத்தை திமுகவினர் அரங்கேற்றியுள்ளார். திமுக கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்து வரும் தமிழக முஸ்லீம் மதவெறி கட்சிகள் கோபம் அடைந்ததாகவும், அதனால் மு.க.ஸ்டாலின் தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் செய்தியைப் பரப்பினார்கள்.
தமிழக முஸ்லிம்கள் மத்தியில் அசாதுதீன் ஓவைசி. மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்தது விட்டார் என்பதை தெரிந்து கொண்டுதான், அவரை சிறப்பு விருந்தினராக திமுகவின் நிகழ்ச்சிக்கு அழைத்தார் ஸ்டாலின். ஓவைசியின் முன்பு இங்கு உள்ள முஸ்லிம் மதவெறி தலைவர்கள், செல்லாக் காசுகள் என்பதையும் ஸ்டாலின் நன்றாக தெரிந்த பின்னர்தான், இந்த முடிவை அவர் உறுதியாக எடுத்துள்ளார்.
ஆனால் இந்துக்களின் ஒற்றுமை இந்த அளவிற்கு ஏற்படும் என்பதை ஸ்டாலின் மிக காலதாமதமாக தெரிந்துகொண்டார். வழக்கம்போல தமிழக இந்துக்கள், சோற்றால் அடித்த பிண்டங்களாக இருப்பார்கள் என்று அவர் தப்புக்கணக்கு போட்டு விட்டார்.
இந்துக்களின் எழுச்சியை உணர்ந்து கொண்ட ஸ்டாலின், பதட்டத்தின் உச்சத்திற்கு சென்று, இந்த முடிவை எடுத்துள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.