அரிசி ஏற்றுமதியில் பத்தாண்டுகளாக உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த வியட்நாம் இப்பொழது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யப் போகிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நெல் சாகுபடி இலாபகரமாக இல்லை நஷ்டத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த வியட்நாம் அரசு வெளியில் அரிசியை வாங்கி கொண்டு அங்கு நெல் சாகுபடியை குறைத்து
மாற்று பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கிறது.
இங்கே நாம் நமது தேவையான அளவு உற்பத்தி என்றால் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். புதிய வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் ஒப்பந்த விலைக்கு விற்பனை செய்ய இனி
எந்த இடையூறு இல்லை.
மேலும் புதிய வேளாண் சட்டம் அமலாகும் பொழது பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்வார்கள்.
மீதி நிலங்களில் பலவேறு காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், விதைகள்,மக்காச் சோளம் போன்றவற்றை நாம் பயிரிடமுடியும் அப்பொழது நமது ஏற்றுமதி அளவு உயரும் அதேசமயம் அரிசி ஏற்றுமதி இருக்காது. நமது தேவைக்கு மட்டுமே நெல் பயிர் செய்யும் காலம் விரைவில் வரும்.
உலகில் வேர்கடலை தேவை முக்கிய இடத்தில் உள்ளது. நவீன முறையில் வேர்கடலை எடுக்கும் இயந்திரங்கள் வருமேயானால் நல்ல இலாபம் கிடைக்கும்.
முக்கியமாக நாம் எந்த பயிர் சாகுபடி செய்தாலும் அதற்கு பாதுகாப்பு தேவை அதாவது செய்யப்படும் பயிர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் தேவை அதை புதிய வேளாண் சட்டத்தின் மூலம் பெற முடியும்.
இனி விவசாயிகள் உற்பத்தி பொருட்களை புதிய வேளாண் சட்டத்தின்படி ஏற்றுமதி செய்ய முடியும்.