காலம் எவ்வளவு விசித்திரமானது என்ப தற்கு எடப்பாடி சசிகலா அரசியலையே
உதாரணமாக கூறலாம். எந்த எடப்பாடி யை வைத்து சசிகலாவின் அரசியலை
அதிமுகவில் இருந்து பிஜேபி முடித்து வைத்ததோ இப்பொழுது அதே சசிகலா வை வைத்து எடப்பாடியின்அரசியலை
அதிமுகவில் இருந்து பிஜேபி முடித்து வைக்க இருக்கிறது.
தமிழக அரசியலில் ஜனவரி மாதம் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் இந்த ஜனவரி மாதமும் தமிழக அரசியல்
வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
இந்த ஜனவரி 14 ம் தேதி சென்னையில்
நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திமுகவை
வீழ்த்த சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறி
இருக்கிறார். இதுதான் இப்பொழுது தமிழக அரசியலில் ஹாட் நியூசாக இருக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விசய த்தை முன் வைக்க விரும்புகிறேன். இப்பொழுது தமிழகத்தில் பிஜேபி எதிர்ப்பு அரசியல் அலையாக உருவெடுத்து இரு க்க முக்கியமான காரணம் யார் என்றால் எடப்பாடி தான் என்று நான் சூடம் அடித்து
சத்தியம் செய்வேன்.
2017 ம் ஆண்டு இதே ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை
யின் 47 வது ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசிய பேச்சுக்கள் தான் தமிழக அரசியல் பிஜேபி எதிர்ப்பு நிலைக்கு மாற வழி வகுத்தது.
குருமூர்த்தியின் பேச்சுக்கு இரண்டே நாட்களில் சசிகலாவின் கணவர் மறைந்த நடராஜன் தஞ்சாவூர் விளாரில் நடைபெற்ற
பொங்கல் விழாவில் பதில் அளித்தார்.
தமிழகத்தில் காவிகளை எந்த வழியிலும் காலூன்ற விட மாட்டோம் என்று கர்ஜித்தார்.கூடவே குருமூர்த்தி அவர்களின் சாதி அடையாளங்களை தூற்றி பகிங்கரமாக பேசினார் நடராஜன்.
இதற்கு பிறகு குருமூர்த்தி சசிகலாவின் குடும்பம் பற்றி துக்ளக் இதழில் தாக்குதலை ஆரம்பித்ததோடு சசிகலாவுக்கு எதி ராக ஓபிஎஸ் ஆதரவு அரசியலையும் பிஜேபியை நோக்கி கொண்டு சென்றார். ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது
அல்லவா..
அது ஜல்லிக்கட்டு போராட்டம் வடிவில் வந்து நின்றது.2017 ஜனவரி இறுதியில் தமிழகத்தில் உருவாக்க பட்ட ஜல்லிக்க ட்டு போராட்டம்பிஜேபிக்கு எதிராகவே உருவாக்கப்பட்ட.து.அப்பொழுது தமிழகம் முழுவதும் தூண்டப்பட்ட பிஜேபி எதிர்ப்பு உணர்வுகள்தான் இன்று வரை பிஜேபி க்கு தமிழகத்தில் தடைகற்கலாக மாறி நிற்கிறது.
அந்த ஜல்லிக்கட்டு போராட்டம் அதன் மூலமாக தூண்டப்பட்ட பிஜேபி எதிர்ப்பு அனைத்திற்கும் காரணமாக இருந்த பி தா மகன் சசிகலாவின் கணவர் நடராஜ ன் தான்.இதற்கு பிள்ளையார் சுழியை
போட்டவர் குருமூர்த்தி தான்.
நடராஜன் ஒரு தமிழ் தேசிய சிந்தனை யாளர்.திராவிட அரசியல் மூலமாக அறியப்பட்டவர்.
காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் அனைவரிடமும் நெருங்கிய தொடர்பு உடையவர். இதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டம் மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக மிகப்பெரிய அள வில் நடைபெற முடிந்தது.
பிறகு சசிகலா சிறைக்கு சென்ற பிறகும் மீண்டும் பிஜேபி எதிர்ப்பு உணர்வுகள் தமிழகத்தில் வளர மறைமுகமாக து ணை நின்றவர் எடப்பாடி தான்.
பிஜேபியின் நோக்கம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தான் அதற்கு பலிகடாவா க இருக்கப்போவது அதிமுக தான் என்று சாமான்ய மக்களுக்கே தெரிந்த நிலையி ல் எடப்பாடி அறியமாட்டாரா?
பிஜேபிக்கு எதிராக திமுகவினால் தூண்டப்பட்ட நெடுவாசல் ஸ்டெர்லைட் போராட்டங்களை மாதக்கணக்கில் நடைபெற வைத்து பிஜேபிக்கு எதிராக தமிழக மக்களிடம் வெறுப்பு வளர துணை நின்றவர் எடப்பாடி தான். இதனால் எடப்பாடிக்கு என்ன லாபம்? என்று நீங்கள் கேட்கலாம்.
தமிழகத்தில் பிஜேபிக்கு வாய்ப்பே
இல்லை என்கிற சூழ்நிலையை உருவாக்கியதன் மூலமாக தமிழகத்தில் பிஜேபி அதிமுக இல்லை யென்றால் ஒற்றை எம்எ ல்ஏ சீட் கூட பிடிக்க முடியாது என்கிற அளவிற்கு பிஜேபியை இப்பொழுது கொண்டு வந்து இருக்கிறார் எடப்பாடி.
கடந்த லோக்சபா தேர்தல் வரை தமிழக த்தில் நிலவி வந்த மத்திய அரசுக்கு எதிர்ரான போராட்டங்களை இப்பொழுது ஏன் காண முடிய வில்லை? மிகுந்த பரபரப் பை ஏற்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சி யின் இடஒதுக்கீடு போராட்டம் ஏன் அமை தியானது? என்று யோசித்து பார்த்தால் எடப்பாடியின் அரசியல் தந்திரங்களை அறிந்து கொள்ள முடியும்.
லோக்சபா தேர்தலின் பொழுது பிஜேபி க்கு எதிராக தூண்டப்பட்ட போராட்டங்களை கண்டு கொள்ளாமல் வளர விட்டு பிஜேபி எதிர்ப்பை தமிழக மக்களிடம் கொண்டு சென்ற எடப்பாடி இப்பொழுது தன்னுடைய முதல்வர் பதவிக்கு ஆபத்து வராத வகையில் எந்த ஒரு போராட்டமும் தமிழகத்தில் நடைபெற முடியாத அளவி ற்கு ஆட்சி செலுத்தி வருகிறார்.
இதைத் தான் பிஜேபியினால் ஜீரணிக்க முடியவில்லை. கூட்டணி என்று கூறிக் கொண்டே. கூட இருந்தே குழி பறித்த எடப்பாடி மீது மோடி அமித்ஷாவுக்கு கடு
மையான கோபம் இருக்கிறது.
அதனால்
தான் எடப்பாடியை முதல்வர் வேட்பாளரா க இன்னமும் பிஜேபி ஏற்க வில்லை.
ஒருவேளை எடப்பாடி இடத்தில் இப்பொழு து ஓபிஎஸ்இருந்து இருந்தால் இப்பொழு து தமிழகத்தில் பிஜேபிக்கு இந்த அளவி ற்கு எதிர்ப்பு இருந்து இருக்கவே முடியாது.
எடப்பாடி மீண்டும் முதல்வராக வந்தா ல் தமிழகத்தில் பிஜேபியை கால் ஊண்ற வேவிட மாட்டார் என்பதால் பிஜேபி எடப்பாடியை ஓரங்கட்டி வைத்து விட்டு அவர் இடத்திற்கு ஓபிஎஸ் அவர்களை கொ ண்டு வர விரும்புகிறது.
பிஜேபி நினைத்தால் இப்பொழுதே எட ப்பாடியை மூட்டை கட்டி அனுப்பி விட முடியும். ஆனால் இதனால் பிஜேபிக்கு மிக ப்பெரிய அளவில் கெட்ட பெயர் உருவா கி அதிமுக பிஜேபி கூட்டணி முறிந்து விடும் சூழ்நிலை உருவாகி விடும். அத னால் தான் பிஜேபி சசிகலா மூலமாக எட ப்பாடியை காலி செய்ய நினைக்கிறது.
அதிமுக பிஜேபி கூட்டணியில் பிஜேபியி ன் முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் தான். இப்பொழுது அல்ல 2017 ம் ஆண்டு செப்ட ம்பர் 22 ம் தேதி அப்போலோ மருத்துவம னையில்ஜெயலலிதா அட்மிட் ஆகி சிகி ச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 5 ம் தே தி மரண மடைந்த பிறகு அடுத்த முதல்வ ராக சசிகலா எடப்பாடியை தான் முன் நி றுத்தினார்.
ஆனால் பிஜேபி எடப்பாடிக்கு பதில் ஓபிஎ ஸ்ஸை கொண்டு வந்து விட்டது. அப்பொ ழுது இப்பொழுது துணை ஜனாதிபதியா
க இருக்கும் வெங்கையா நாயுடு தான் தமிழகத்தில் டேரா போட்டு சசிகலா முன் நிறுத்திய எடப்பாடியை ஓரம் கட்டி வைத்து விட்டு ஓபிஎஸ் அவர்களை முதல்வராக கொண்டு வந்தார்.
அப்பொழுது இருந்தே ஓபிஎஸ் பிஜேபி இடையே எடப்பாடிக்கு பஞ்சாயத்து ஆரம்பமாகி விட்டது ஓபிஎஸ் அவர்களும் தன
க்கு முதல்வர் பதவி கிடைக்க துணை நின்ற பிஜேபிக்கு விசுவாசம் காட்ட ஆரம்
மித்தார் இதனால் கடுப்பான சசிகலா ஓபிஎஸ் அவர்களிடம் இருந்து முதல்வர் பதவியை காலி செய்து அதிமுகவில் இருந்தும் நீக்கி விட்டு அவரே முதல்வராக விரும்பினார்
பதிலுக்கு பிஜேபி சசிகலா முதல்வராக விடாமல் பல வழிகளில் தடுத்து அதில் வெற்றியும் பெற்றது.
பிஜேபியிடம் தோல்வி அடைந்த சசிகலா கடைசியில் சிறைக்கு செல்லும் முன் தான் விரும்பியபடி எடப்பாடியை முதல்வராக்கி விட்டு சென்றார்
ஓபிஎஸ் அளவிற்கு எடப்பாடி விசுவாசம் உள்ளவர் அல்ல என்று சசிகலாவே இப்பொழுது தெரிந்து கொண்டார் என்பதால் எடப்பாடியை அதிமுகவில் இருந்து காலிசெய்ய நினைக்கிறார். இதற்காக அவர் துணைக்கு அழைப்பது ஓபிஎஸ் அவர்க ளைத்தான்.ஆக எடப்பாடியை எதிர்த்து அவரை வீழ்த்த ஓபிஎஸ் சசிகலா கூட்ட ணி உருவாகியே தீர வேண்டிய நிலை யை பிஜேபி இப்பொழுது உருவாக்கி வருகிறது.
சசிகலா மூலமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பிஜேபி அடிக்க நினைக்கிறது.ஒன்று அதிமுக ஓட்டுக்களை பிள வு பட முடியாமல் தடுக்க முடியும். இன்னொன்று பிஜேபி நினைத்த மாதிரி அதிமுக பிஜேபி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்களை கொண்டு வர முடியும்.
ஸோ வெயிட்டிங் பார் சசிகலா ரிலீஸ்..