இந்தியாவின் ஒட்டுமொத்த போட்டித்திறன் மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்த விரிவான அறிவிப்புகள், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் வர்த்தக துறைச் செயலாளர் டாக்டர் அனூப் வாத்வான் கூறியுள்ளார். இவற்றின் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகளில் வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்புதல்கள் பெறுவதையும், நடைமுறைகளையும் எளிமையாக்கி வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உருவாக்கி முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டையும் இவை பூர்த்தி செய்கின்றன.
2021-22 பட்ஜெட் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், துடிப்பான உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து, பயன்பாடுகளுக்கான சூழ்நிலையை உற்பத்தி துறைக்கு ஏற்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ஜவுளித்துறையில் சர்வதேச வெற்றியாளர்களை உருவாக்கி அத்துறையை வளர்ச்சியடைய செய்வதற்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை நிறுவக்கூடிய திட்டமான மிகப்பெரிய முதலீடுகளுடனான ஜவுளிப் பூங்காக்கள் (மித்ரா) இந்த நடவடிக்கைகளில் ஒன்று அவர் கூறினார். அடுத்த மூன்று வருடங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும்.
மேலும் பேசிய அவர், கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், பெதுவாகாட் ஆகிய ஐந்து முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்களையும், மீன் மையங்களையும் உருவாக்குவதற்கான குறிப்பிடத்தகுந்த முதலீடுகள், தமிழ்நாட்டில் பல்முனை கடற்பாசி பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜவுளி மற்றும் கடல்சார்ந்த துறைகளில் ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















