கொவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசியின் எண்ணிக்கை சுமார் 12 கோடியை எட்டியுள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 17,37,539 முகாம்களில் 11,99,37,641 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
91-வது நாளான நேற்று (ஏப்ரல் 16, 2021), நாடு முழுவதும் 30,04,544 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,34,692 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, சத்திஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 79.32 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63,729 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27,360 பேரும், தில்லியில் 19,486 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 16,79,740 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 11.56 சதவீதமாகும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக (87.23%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,23,354 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















