உலகின் வளரும் நாடுகள், வளராத நாடுகள் என்று அனைத்து நாடுகளிலும் தங்களுடைய வியாபார சந்தை சாம்ராஜ்யத்தை இந்த நேரத்தில் ஆக்கிரமித்து… ஆதிக்கம் செலுத்துவதில்.. சண்டை பெரிதாக இருக்கிறது.
இத்தகைய களத்தில் தான்… இந்தியா… குறைந்த விலையில் தடுப்பூசி கண்டுபிடித்து தயாரித்ததும் அல்லாமல்… அதனை தேவைப்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தும் உதவியது !
உலகின் ஆகப்பெரிய சந்தையாம் இந்தியாவையும் ஆக்கிரமிக்க முடியவில்லை. பிற நாடுகளிலும் … விலை குறைந்த இந்திய மருந்து நுழைந்து மக்களுக்கும், நாடுகளுக்கும் உதவியதில் … மருந்து கம்பெனிகளின் லாபி + அரசுகள் அடைந்த இயலாமையும், கோபமும் தான்..
இப்போது… இந்திய தடுப்பு மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருளை தர மறுத்து … அவசரத்தில் இருக்கும் இந்தியாவை கட்டுப்படுத்தி சரணடைய வைக்கும் தந்திரமாக செயல்படுத்தப்படுகிறது.
இதனை செய்வதில் அமெரிக்கா, ஸ்வீடன், என்று சில நாடுகள் கை கோர்க்கின்றன. இந்த நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் லிபரல்கள். இதுவே இன்றைய கொரோனா காலம் வெளிப்படுத்தி இருக்கும் உலக மருத்துவ லாபியின் வியாபார வெறியும் + லிபரல்களின் அரசியலும் காட்டும் அவல முகம்.
இத்தகைய அழுத்தங்களுக்கு பதிலடியாக … ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவிற்குள் அனுமதித்திருக்கிறது மோடி அரசு.
மேலும், ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் .. மூலப்பொருள் தயாரிப்பில் இறங்கி இருக்கிறது.
மோடி ஏன் ஆத்மநிர்பார் என்று இந்திய உற்பத்தி / இந்திய தயாரிப்பு என்று முனைப்புடன் கவனம் செலுத்துகிறார் ? ஏன் அதனை மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கிறார்? என்பதை … இக் கொரோனா கால அமெரிக்க & சீனா மற்றும் அதன் அடிவருடிகளின் மருத்துவ லாபி சாமானிய மக்களுக்கும் புரிய வைக்கிறது.
உலகிலேயே …. வல்லரசுகள் திணறி கொண்டிருக்கையில்… தன் நாட்டு மக்களில் 12 கோடி பேருக்கும் மேலாக தடுப்பூசி போட்டிருக்கும் நாடு.. இந்தியா தான்.
தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோ டெக் நிறுவனம்… நாசி வழி செலுத்தும் மற்றுமொரு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்திருப்பதாக செய்தி.
நாடு முழுவதிலும்… மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு… போர்க்கால அடிப்படையில் விரைந்து செய்யப்படுகிறது. பல பெரு நிறுவனங்கள் உதவியோடு… மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு விட்டன.
இதனை தாண்டி…. உலகின் தேவைப்பட்ட நாடுகளுக்கெல்லாம் …அவர்களின் தேவை அறிந்து தடுப்பூசி அனுப்பி வைத்து அவசரத்தில் உடன் நின்று உதவிய மோடி அரசுக்கு…இன்று அந்த நாடுகள் எல்லாம் ஓடோடி வந்து உதவுகின்றன.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சவூதி அரேபியா, டென்மார்க் .. இன்னும் பலப் பல நாடுகள் மருத்துவ ஆக்சிஜன் & மற்றும் இன்ன பிற உதவிகளை விரைந்து அனுப்பிக் கொண்டிருக்கின்றன. உதவிகள் குவியத் தொடங்கி இருக்கிறது.
இவை அனைத்தும்… உலகின் வல்லமையான மருத்துவ லாபியையும், அதனால் பிழைக்கும் அரசியலையும் தாண்டி நடக்கிறது.
மோடியின் Medical Diplomacy-ன் ஆக்கபூர்வமான விளைவு இது.
உலக நாடுகள் பேரிடரின் போது ஒரு குடும்ப மக்களாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவி கொள்ளச் செய்யும் மனிதம் உயிர்த்த தூண்டுதல்…. மோடியின் வசுதெய்வ குடும்பக முன்னெடுப்பு.
உலக நாடுகள் இந்தியாவிற்காக ஒருங்கிணைவதாலும், அமெரிக்கா & சீனா மருத்துவ போட்டியில்.. இந்தியாவின் கரங்களை முறுக்கி வழிக்கு கொண்டு வர முடியவில்லை என்பதாலும்… இன்று.. அமெரிக்கா இந்திய தடுப்பூசிக்கான மூலப்பொருளுக்கான தடையை நீக்கி இருக்கிறது.
இதன் மூலம், அமெரிக்காவா… சீனாவா? என்கிற இந்தியாவின் ராஜீய பார்வையில்..அமெரிக்கா ஒரு படி மேலேறி இருக்கிறது.
உலக அரசியலும், பூலோக அரசியலும், லிபரல் அரசியலும் , அவற்றை பின்னிருந்து இயக்கும் லாபிகளும் இப்படியானவை தான்.
- பானு கோம்ஸ்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















