முதலில் பெங்களூரில் ஆளும் கட்சி எம்பி களத்தில் இறங்கி செயல்பட்டது போல அத்தனை திமுக எம்பிக்களும், எம்எல்ஏகளும் களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் மருத்துவமணைகளுக்கு வந்து நேரடியாக செக் பண்ணி மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். நீங்கள் உள்ளே வந்தால் பணிகள் ஒழுங்காக நடக்கும்.
எடப்பாடி பழனிசாமி அரசு திறம்பட செயல்பட்டது என்றால் முக்கிய காரணம் அமைச்சர்களுக்கு முழ சுதந்தரம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு மேலே முதல்வரின் தனிச் செயலாளர்கள். இதனால் அதிகார மையங்கள் உருவாகிவிட்டது. இதனால் அமைச்சர் பணி தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளது. உங்களை ஆட்சியில் அமர்த்தியது திமுகவினரே தவிர அதிகாரிகள் அல்ல. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உங்க கட்சி சார்பில் இளைஞர் குழு அமைக்க திமுக ஏற்பாடு செய்யட்டும்.
கிராமங்களில் குழுக்களை அனுப்பி பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சானிடைசர் வைத்து சுத்தம், அனைவருக்கும் டெஸ்ட் எடுங்கள். ஆரம்ப நிலையில் கண்டறிந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.