கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இவர் கடந்த 5 ஆண்டுகளாக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தாமரை கோவை தெற்கு தொகுதியில் மலர்ந்தது. கமல் மற்றும் மயூரா ஜெயக்குமார் என்ற இரு பெரிய பிம்பங்களையும் தோற்கடித்தது வானதி சீனிவாசனின் வரலாற்று சாதனையே.. இதற்கு காரணம் அவர் 5 ஆண்டுகளாக களப்பணி ஆற்றியதே.
கடந்த கொரானா காலகட்டத்தில் தமிழகத்தில் முதன் முறையாக மோடி கிட்சன் திறந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை தீர்த்தவர். வானதி சீனிவாசன் அவர்கள் தற்போது புது முயற்சியாக நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகன சேவையை இரு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மிக உச்சமாக உள்ளது. தினசரி 3 ஆயிரம் பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 20 பேர் தினமும் இறக்கும் அளவிற்கு நிலைமை காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது மாநில அரசிற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவிற்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலையே உள்ளது.
இந்த நிலையில் அந்த வகையில் பாஜகவின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் சேவா பாரதி இணைந்து கோவையில் கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளனர். அந்த இயந்திரத்தில் யார் வேண்டுமானாலும் வந்து ஆவிபிடித்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினைக்கு ஆவிபிடிப்பது நல்ல பலன் கிடைக்கும் . இதன் அடிப்படையில் தினமும் பலர் வீடுகளில் ஆவி பிடிக்கிறார்கள்.
கோவை தெற்கு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அதை கோவை மாநகராட்சி முன் களப்பணியாளர்கள் இதை முதலில் பயன்படுத்தினர். பாஜகவினவானதி சீனிவாசனின் இந்த முயற்சிக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.