நேற்றைய தினம் கொரோனா குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை, வெளி மாநிலத்தவர் 6 பேர் உள்பட 36 ஆயிரத்து 184 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2 லட்சத்து 74 ஆயிரத்து 629 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 425 பேர் ஆண்கள் என்றும், 15 ஆயிரத்து 759 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.சென்னையில் மேலும் 5 ஆயிரத்து 913 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் 3 ஆயிரத்து 243 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 226 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 796 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.திருவள்ளூரில் ஆயிரத்து 667 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 656 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 ஆயிரத்து 478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 467 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 467 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 168 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 299 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,598 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 109 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனவை கையாள்வதில் தமிழக அரசு தடுமாறுவதாக பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















