சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்வபம் அம்பலமானது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எதற்கும் குரல்கொடுக்காத கனி மொழி இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தார். மேலும் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளியை அரசே நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இந்த விவகாரம் சாதிய ரீதியாக அணுகப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இதுபோல் பல்வேறு கிருஸ்துவ பள்ளிகளின் மேல் புகார்கள் எழுந்தது, அப்படியானால் அனைத்து பள்ளிகளையும் அரசே நிர்வகிக்குமா என கேள்விகள் எழுந்தது, இந்துக்கள் பள்ளி என்பதால் தான் இந்த பாகுபாடு என விமர்சனங்கள் எழுந்தது
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில்
கடந்த 25 ஆண்டுகளில் திமுக அரசை, நீதிமன்றங்கள் மூலம் பலமுறை நான் தோற்கடித்து உள்ளேன். இருந்தாலும் திமுகவின் துஷ்ட சக்திகளான தி.க போன்றவை என்னை தோற்கடித்து விடலாம் என்று கனவு காண்கின்றன.
நடராஜர் ஆலயத்தை அரசு எடுத்துக்கொண்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நான் திமுகவை வீழ்த்தினேன். அதேபோல ராமர் சேது விஷயத்திலும் சுப்ரீம் கோர்ட்டில் திமுகவை நான் தோற்கடித்தேன். இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “திமுக ஆட்சிக்கு வந்த நாட்களிலேயே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து, இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி, அறிக்கை தயாரித்து வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றும் திமுகவை கதறவிட தயாராக இருக்கிறார் என்பது மட்டுமே தெளிவாக புரிகிறது.