நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு மேலும் குறைந்து 1.27 லட்சமாகியுள்ளது; தினசரி கொவிட் பாதிப்பு, கடந்த 54 நாட்களில் மிகக்குறைவு; புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெற்றவர்கள் 1,30,572 பேர் குறைந்ததால், தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18,95,520-ஆக உள்ளது; 43 நாட்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 20 லட்சத்துக்கும் குறைவு.
நாட்டில் இதுவரை மொத்தம் 2,59,47,629 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,55,287 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 19வது நாளாக, தினசரி குணமடைந்தோர் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 92.09 சதவீதமாக உள்ளது.
வாராந்திர பாதிப்பு வீதம் 8.64%
தினசரி கொவிட் பாதிப்பு விகிதம் 6.62 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 8 நாட்களாக இந்த அளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கொவிட் பரிசோதனை அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 34.67 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தேசியளவிலான தடுப்பூசி திட்டத்தின் கீழ் 21.6 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.