தமிழக பா.ஜ.க விவசாய அணி சார்பில், சென்னை பாஜக தலைமை அலுவலத்தில் கமலாலயத்தில் முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்கள் மற்றும் ஆக்ஜிசன் செறிவூட்டும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்களை வழங்கினார்.
அவருடன் விவசாய அணி தலைவர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு பின் முருகன் கூறியதாவது:மத்திய அரசின் ஏழு ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்து கூறி வருகிறோம். தமிழகம் முழுதும் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில், பா.ஜ.க சார்பில் இலவச மளிகை பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக அரசு தனது அதிகாரபோக்கை காட்ட ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் அரசு நுாலகங்களுக்கு ‘முரசொலி’ நாளிதழ் வாங்க முடிவு செய்திருப்பது, இது தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குதல், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு உடனே நிறைவேற்ற வேண்டும், பின்பு மத்திய அரசை குறை கூறலாம் என காட்டமாக பேசினார். தமிழக பா.ஜ. க தலைவர் எல்.முருகன் என கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















