வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000 கொடுத்து அதை திரும்ப பெறுகிறது என அரசியல் கட்சிகள் சரமாரியக திமுக அரசினை கேள்வி கேட்டு வருகிறார்கள்.
மேலும் கடந்த ஒரு மாதமாகத்தான் அடி தடி சண்டை சச்சரவுகள் இல்லாமல் பெண்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள்;மீண்டும் டாஸ்மாக் திறந்துபெண்களின் வயிற்றில் அடிக்கவேண்டாம் என பல குரல்கள் எழுந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று முழுவதும் நீங்கவில்லை இறப்பு விகிதமும் குறையவில்லை இந்த நேரத்தில் டாஸ்மாக் தேவையா என்ற கேள்வி உருவாகிறது.
இதுகுறித்து தமிழக அரசோ அரசிற்கு வருமானம் இல்லை என செய்திகள் வெளிவருகிறது. அதன்காரணமாக டாஸ்மாக் திறக்கப்படுகிறது. சமூகவலைதலங்களில் பரவிருக்கிறது. அப்படியே இருந்தாலும் மது கடைகள் இல்லாதாகுஜராத் மாநிலம் அங்கு மதுவால் வருமானம் இல்லை ஆனால் குஜராத் வருடா வருடம் வருவாய் உபரி பட்ஜெட் (Revenue surplus) போட்டுக்கொண்டிருக்கிறது.ஆனால் வருடத்திற்கு சுமார் 30,000 கோடிக்கு மேல் டாஸ்மாக் வருமானம் கிடைக்கும் தமிழ்நாடு அரசு சுமார் 65,000 கோடி வருவாய் பற்றாக்குறையுள்ள பட்ஜெட் (Revenue deficit) போடுகிறது.
குஜராத் மட்டும் அல்ல, அவர்கள் ஆளும் (அல்லது அவர்கள் கூட்டணி ஆளும்) பீகார், மிசோரம், நாகலாந்து என்று 4 மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அதனால், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி போராட தார்மீக உரிமை உள்ள ஒரே கட்சி பாஜக மட்டும்தான்..என பா.ஜ.க வினர் மார்தட்டி வருகிறார்கள்..
மேலும் மக்களின் உடல்நிலை, பொருளாதார நிலை, கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் பற்றி கவலை கொள்ளாமல், திமுக கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் பெரும் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறது என பலவேறு தரப்பினர் குற்றம் சட்டி வருகிறார்கள். தகவல் நன்றி: விஜி ஸ்ரீராம்