திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான சேவா பாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பங்கேற்றார்கள். கடந்த , ஜூன் 13ம் தேதி திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவாபாரதி அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் 19 கேர் செண்டர் விழாவில் தி.மு.க அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோ கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற திமுக அமைச்சர்கள் பாரத மாதா படத்தின் முன்பு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் திமுக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளருமான செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திருப்பூர் சேவாபாரதி & ஹார்ட்ஃபுல்நெஸ் அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட கோவிட் கேர் மையத்தை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் மாண்புமிகு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் நானும் திறந்து வைத்தோம்” என தெரிவித்திருந்தார்.
மேலும் இதறகு தி.க அமைப்புகள் தோழமை சுட்டால் என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் மாநில சுகாதர துறை அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டதை பற்றி கேள்விகளை முன்வைத்தார்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் மாண்புமிகு தமிழக முதல்வர் சொன்னது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என கூறினார். தற்போது அது மக்கள் இயக்கம் செயல்படுகிறது என தெரிவித்தார் என பதில் அளித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















