தெற்கு சூரங்குடி கீழமாவிலை ராஜாக்கமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.காந்தி. இவருக்கு 75 வயதாகிறது. எம்.ஆர்.காந்தி அவர்கள் பின்புலம் என்பது ஏதும் இல்லை பெரிய பண பலமோ, அதிகார பலமோ கொண்டவர் அல்ல. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்காகவும், பா.ஜ.கட்சியின் பணிகளுக்காகவும் மக்களுக்காகவும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பணியாற்றுபவர். சொந்தமாக வீடுகூட இல்லை. காலில் செருப்புகூட போடுவது இல்லை. கசங்கிய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு மாவட்டம் முழுவதும் வலம்வருபவர்
1980-ம்ஆண்டில் இருந்து 6 முறை நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதிதான் 1996-ல் பா.ஜ.க-வுக்கு முதல் எம்.எல்.ஏ-வைக் கொடுத்தது. அதன் பிறகு குமரியிலிருந்து கோட்டைக்குச் செல்லும் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். நினைவு தெரிந்த நாள் முதல் காலணியே அணியாதவர். போதிய ஆதரவாளர்கள் இல்லாத நிலையில் வீடு, வீடாக நடந்தே சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தவர். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எம்.ஆர்.காந்தி அவர்கள் இன்று செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். இந்த காலத்திலும் இது போன்ற மனிதர்கள் அதுவும் சட்டமன்ற உறுப்பினராக!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















