சேலம் மாவட்டம் இடையப்பட்டியை சேர்நதவர் வெள்ளையன் என்ற முருகேசன் இவருக்கு வயது 42 . அவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவருக்கு இரு பிள்ளைகள் உண்டு. இந்த நிலையில் சேலம், ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது . வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த வியாபாரி முருகேசனை மடக்கிய காவல்துறையினர் அவருடைய வாகனத்தின் சாவியை பிடுங்கியுள்ளார்கள்.
ஏன் சாவியை எடுக்கிறீர்கள் என்று கேட்ட முருகேசன் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . மேலும் அந்த இடத்தில் இருந்த மூன்று காவலர்களும் சேர்ந்துகொண்டு வியாபாரி முருகேசனை தாக்கியுள்ளார்கள். எங்களிடம் வந்து ரூல்ஸ் பேசறியான்னு அடித்துள்ளார். காவலர்கள் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த முருகேசன் மயக்கமடைந்துள்ளார்.
பின் முருகேசனுக்கு தண்ணி கொடுத்து எழுப்பியுள்ளார்கள் ஆனால் அவர் மயக்கம் தெளியவில்லை 108 க்கு கால் செய்து முருகேசனை தூக்கி கொண்டு உள்ளுர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்கள் மருத்துவர்கள் அவரை உடனடியாக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
ஆத்தூரில் இருக்கும் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முருகேசனுக்கு சேலம் பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறியுள்ளார். பின் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முருகேசன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். முருகேசனின் உடலானது சேலம் அரசு மருத்துவமனை பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்கள் முருகேசனை தாக்கிய மூன்று காவலர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என அவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்
இதேபோன்று சம்பவம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது வாய் திறந்த ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் தற்போது வாய் திறக்கவில்லை கண்டனம் குரல்களையும் எழுப்பவில்லை இதுதான் நடுவே நடுநிலை போல என சமூக வலைத்தளங்ககளில் ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
சேலத்தில் போலீசார் தாக்கி உயிரிழந்தவரை நேரில் பார்த்தவரின் வாக்குமூலம் காவல்துறையைக் கைக்குள் வைத்திருக்கும் முதல்வர் பதில் சொல்வாரா? சேலம், ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் தாக்கப்பட்ட வெள்ளையன் (எ) முருகேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதைப்பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்காதது ஏன்?