கன்னியாகுமரியில் இயங்கி வரும் ஜமாத் சில காரணங்களுக்காக ஜமாத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இரு இஸ்லாமிய அமைப்பாக பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுல்தான் என்பவரது மனைவி ரொஹியாம்மாள் (76) காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய ஜாக் என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு வாய்த்தகராறு முற்றி கை கலப்பாகாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இருதரப்பை சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.