இந்திய சுதந்திர போராட்டத்தில் மூன்று மாநிலங்கள் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தன. தமிழகம், மகாராஷ்டிரம், வங்களாம் ஆகியன. அதிலும் பெருமைக்கு உரியது நமது தமிழ்நாடு. சுதந்திரத்திற்காக உயிரை துச்சமாக மதித்து தடியடியும், தூக்குமேடையும், கொடுஞ்சிறையும் ஒரு பக்கம் தமிழர்கள் அனுபவித்த அதே காலக்கட்டத்தில் தான் நீதிக்கட்சி, திராவிட கழகம் போன்றவை வெள்ளைக்கார கொடுங்கோலன் ஆட்சியின் அடிவருடிகளாக இருந்து, சுதந்திர போராட்டத்தை நீர்த்துப்போக செயல்பட்டன என்பதும் வரலாறு.
ஜெய்ஹிந்த் எனக் குறிப்பிட்டாமல் தமிழக கவர்னர் உரை முடித்ததற்கு கொங்கு வேளாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் பாராட்டுத் தெரிவித்து, ஜெய் ஹிந்த் என்பதை கேவலமாக சித்தரித்து, தமிழக முதல்வர் முன்னிலையில் பேசியுள்ளார்.ஜெய் ஹிந்த் என்பது தமிழகத்தின் வீரத்தியாகி செண்பகராம பிள்ளையின் லட்சிய கோஷம். இதனை மூத்த எழுத்தாளர் திரு. ரகமி ஆதாரத்துடன் அவரது சரித்திரத்தை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக உளவு அமைப்புகள் உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய மூன்று பக்க ரகசிய அறிக்கையால்,அமித் ஷா கடும் கோபத்தில் உள்ளார் என்கிறது டெல்லி வட்டாரம். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் சமீபத்தில் துவங்கியது.கவர்னர் உரையின் இறுதியில் வழக்கமாக, ‘ஜெய் ஹிந்த்’ எனப்படும் நாடு வெல்லட்டும் என்ற வார்த்தை இடம்பெறும்.ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், அந்த வார்த்தை நீக்கப்பட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள மத்திய உளவு அமைப்புகள், மூன்று பக்கங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளன.’கவர்னர் உரையில் முதலில் ஜெய் ஹிந்த் வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அதை நீக்கி, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்’ என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, அமித் ஷாவுக்கு அதிர்ச்சியை விட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி சட்டசபை கூடும் போதெல்லாம் சபையில் ஜெய் ஹிந்த் என கோஷமிடும்படி, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அறிவுறுத்தப் பட உள்ளதாக தெரிகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















