கனடாவின் பழங்குடிகள் மக்கள் என்பவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள் அவர்களை அங்குள்ள மக்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் அழைத்து வருகிறார்கள் . பல நாடுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் பல நாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தார்கள். கனடா நாடும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களாக வாழ்ந்து வந்த இந்தியர்களுக்காக இந்திய உறைவிட பள்ளி முறை உருவாக்கப்பட்டது. இந்த உறைவிட பள்ளியினை ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் தான் இயக்கி வந்தது. இந்த உறைவிட பள்ளிகளுக்கு பழங்குடியின குழந்தைகளை இந்தியாவினை சேர்ந்த பெற்றோர்களிடமிருந்து பிரித்து, கட்டாயப்படுத்தி சேர்த்து அவர்களது மதத்திலிருந்து மதம் மாற்றும் வேலையை செய்தது. சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இவ்வாறு கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர்.
உறைவிட பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் சொந்த மொழியில் பேசினால் கடுந்தண்டனை வழங்கபட்டது. கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு உடல் மற்றும் பாலியல் ரீதியதான தொல்லைகளுக்கு கொடுத்துள்ளார்கள். இதனை கனடா அரசே ஒப்புக்கொண்டுள்ளது.குறிப்பிடத்தக்கது. உறைவிட பள்ளியில் தங்கி படித்த மாணவர்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் குழைந்தைகள் நோய் மற்றும் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இப்பள்ளிகள் 1899 முதல் 1997 வரை இயங்கியுள்ளன. கடந்த மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிறிஸ்தவ உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் ரேடார் மூலமான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆய்வினை தொடர்ந்த ஆய்வுக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சஸ்கேட்ஷீவான் மாகாணம், மேரீவல் இந்திய உறைவிட பள்ளியில் 600 பேரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இச்சம்பவத்தை கலாசார படுகொலை என கனடா பழங்குடியின தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழங்குடியின மக்கள் மீதான இத்தாக்குதலுக்கு கனடாவிற்கு நேரில் வந்து அவர்களிடம் போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதன் முக்கியத்துவம் தொடர்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் குறிப்பிட்டார். மாணவர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போப் பிரான்சிஸ் தனது வேதனையை வெளிப்படுத்தினார். ஆனால் பழங்குடியின மாணவர்கள் விவகாரத்தில் சர்ச்சின் பங்கிற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.