சேலம் மாநகரம் கொண்டப்பநாயக்கன்பட்டி Y.C.C ரோடு கதவு எண் 1136-A என்ற வீட்டில் குடியிருந்து கொண்டு கடந்த 10 மாதங்களாக வாடகை தராமலும், வீட்டு உரிமையாளர் ஆ சா குமாரி (53) என்பவர் தொடர்ந்து வீட்டை காலி செய்ய சொல்லியும் வீட்டை காலி செய்து தராமலும் இருந்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் 24.02.2020 அன்று அவரது உறவினர்களுடன் சென்று வீட்டை காலி செய்ய சொன்னபோது, வீட்டு உரிமையாளரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக வந்த புகாரின் பேரில் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி போலீசார் இன்று 26.02.2020 ஆம் தேதி விசாரணை மேற்கொண்டு சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வந்ததை அடுத்து குற்றவாளி சேத்தியா (எ) பியூஸ் மானுஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















