கடந்த மார்ச் 10 ம் தேதி தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவி ஏற்றார்.முதல்வராகி மூன்று மாதம் தான் முடிந்து இருக்கிறது அதற்குள் முதல்வர் பதவியை ராஜினா மா செய்து விட்டார். ஏற்கனவே முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது மக்களுக்கு கடுமை
யான அதிருப்தி இருந்ததால் அடுத்த வருடம் உத்தர காண்டில் தேர்தல் நடைபெற இருக்கும் தேர்தலை முன் வைத்து திரி வேந்திர சிங் ராவத்தை நீக்கி விட்டு தீரத்சிங் ராவத்தை முதல்வராக்கினார்கள்.
லோக்சபா எம்பியாக இருந்த தீரத் சிங் ராவத்தை முதல்வராக்கியதன் நோக்கமே அடுத்த ஆறு மாதத்திற்குள் தீரத் சிங் ராவத் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று அடுத்தஆட்சியும் பிஜேபி ஆட்சி தான் என்று மக்களை நினைக்க வைக்கவே அவரை முதல்வராக்கினார்கள்.
தீரத் சிங் ராவத் முதல்வராகி ஒரு மாதம் கழித்து நடைபெற்ற சால்ட் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிஜேபிக்கு எதிர் பாராத வெற்றி கிடைக்கவும் பிஜே பியினர் தீரத் சிங் ராவத்தை தலையில் தூக்கி வைத்துகொண்டாட ஆரம்பித்தார்கள்
கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்று ம் நிவாரண பணிகளில் தீரத் சிங் ராவத்தின் செயல்பாடுகள் உத்தரகாண்ட் மக்க ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அடுத்து வரு வதும் பிஜேபி ஆட்சியே என்று மக்களே கூற ஆரம்பித்து இருந்தார்கள்.இந்த நிலையில் தீரத் சிங் ராவத் திடீரெ ன ராஜினாமா செய்து இருக்கிறார். இன்னும் 6 மாதங்களில் உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் மீண்டும் ஒரு முதல்வர் மாற்றம் மூலமாக பிஜேபி தொண்டர்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது பிஜேபி தலைமை.
உத்த்ர காண்ட் மக்களும் முதல்வர் மாற்ற த்தினால. பிஜேபி மீது அதிருப்தியடைவர்கள் என்பது நிச்சயம். இதையெல்லாம் அறிந்தே வேறு ஒரு முக்கியமான கார ணத்திற்காகவே பிஜேபி தீரத் சிங் ராவ த்தை முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்து இருக்கிறார்கள். அது என்ன முக்கியமான காரணம்?
தீரத் சிங் ராவத் எம்எல்ஏவாக இல்லாமல் முதல்வராகி இருந்தார். முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து 6 மாத காலத்தி க்குள் தீரத் சிங் ராவத் எம்எல்ஏவாகி இருக்க வேண்டும்.அதாவது செப்டம்பர் மாதததிற்குள் தீரத் சிங் ராவத் எம்எல்ஏவாக தேர்வு பெற வேண்டும்.ஆனால் இப்பொழுது உள்ள நிலையில்
தேர்தல் கமிஷன் இடைத் தேர்தலை நடத்த விரும்ப வில்லை என்றே தெரிகிறதுஇதனால் தான் தீரத் சிங் ராவத் முதல்வர்பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக கூறுகிறார்.
இதே மாதிரியான நிலைமை தான் மம்தா பானர்ஜிக்கும் இருக்கிறது. நந்தி கிராம் சட்டமன்ற தொகுதியில் பிஜேபி வேட்பா ளராக போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிட ம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்து இருந்தாலும் முதல்வராகி விட்டார் மம்தா பானர்ஜி வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் எம்எல்ஏவாக தேர்வானால் தான் முதல்வராக நீடிக்க முடியும். ஒருவேளை தேர்தல் கமிஷன் மேற்கு வங்கா ளத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெற்ற கலவரங்களை முன் வைத்து கொரானாவை காரணம் காட்டியும் தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்று அறிவிக்கலாம்.
ஒரு வேளை வருகின்ற அக்டோபர் மாத த்திக்குள் மம்தாபானர்ஜி எம்எல்ஏவாக முடியவில்லை என்றால் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டுஇன்னொருவரை முதல்வராக்கி வேடிக்கை பார்க்க வேண்டியது தான் உத்தரகாண்ட் முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத்தை எம்எல்ஏவாக்க தேர்தல் நடைபெற இருந்தால் அதே நேரத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றாக வேண்டும் இப்பொழுது தீரத்சிங் ராவத் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதால் இன்னும் சில மாதங்களுக்கு இடைத்தேரதல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.
இதனால் மம்தா பானர்ஜி எம்எல்ஏ வாகமுடியாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். அந்த மாதிரி சூழ்நிலையை உரு வாக்க வேண்டும் என்பதற்காகவே உத்தர காண்ட் முதல்வராக இருந்த தீரத் சிங்ராவத்தை ராஜினாமா செய்ய வைத்து இரு்கிறார்கள் என்றே அரசியல் கூற்றுகள் உள்ளது.
இனி உத்தரகாண்டில் பிஜேபி சார்பாக யார் முதல்வராக பதவியேற்றாலும் இன்னும் 6 மாத காலத்திற்குள் அங்கு சட்டமன்ற பொது தேர்தலே நடைபெற இருப்பதால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது.ஆனால் மம்தா பானர்ஜி இன்னும் 4 மாத காலத்திற்குள் எம்எல்ஏவாகியே தீர வேண்டும் இல்லையென்றால் முதல்வர் பதவி காலி..ஐ திங் மம்தா பானர்ஜிக்கு செக் வைக்கவே உத்தர காண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத் மூலம் காய் நகர்த்தி உள்ளது பாஜக.
கட்டுரை வலது சாரி சிந்தனையாளர் : விஜயகுமார் அருணகிரி