நாட்டில் மேற்கொள்ளப்படும் 20 மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, திட்ட கண்காணிப்பு குழுவுடன் ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ், பீகார், ஹரியானா, தமிழ்நாடு அரசுகளின் தலைமை செயலாளர்கள் உட்பட மத்திய, மாநில அதிகாரிகள் பலர் கலந்துகா கொண்டனர். இதில் முக்கிய உள் கட்டமைப்பு திட்ட பணிகளின் முன்னேற்றங்களை பாதிக்கும் பிரச்சினைகள், மற்றும் குறித்த நேரத்தில் முடிப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டில், மேற்கொள்ளப்படும் 20 முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள 59 பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இவற்றில் 11 திட்டங்கள், பிரகதி திட்டத்தின் கீழ் பிரதமரால் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டவை.
இத்திட்டங்களை சரியான நேரத்தில் தொடங்குவதற்கு, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அமைச்சர் திரு பியூஷ் கோயல் உத்தரவிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் மிக முக்கியமான இந்த உள்கட்டமைப்பு திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில் நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 7.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாட்டின் ஏற்றுமதி, ஜூன் காலாண்டில் அதிகரித்து உள்ளது. இது, இந்திய வரலாற்றில் இதற்கு முன் இல்லாத உயர்வாகும். இதற்கு பொறியியல், அரிசி,புண்ணாக்கு, கடல் பொருட்கள் ஆகியவற்றின் பங்களிப்பு அதிகரித்தது காரணமாக அமைந்து உள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், ஏற்றுமதி 3.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், ஏற்றுமதி 6.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் மட்டும் 47 சதவீதம் அதிகரித்து 2.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதியை 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்க, அமைச்சகம் இலக்கு வைத்து, அனைத்து தரப்பினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது. என கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















