இந்துதமிழர்களின் கலை பண்பாட்டு அடையாளமாக இன்றளவும் உயர்ந்து நிற்பது தஞ்சை பெரிய கோயில்.தனது ஆட்சி முறையில் அனைத்து மக்களையும் அரவணைத்து நல்லாட்சி செய்த நாயகன் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகம் முழுக்க சைவநெறி பரப்பிய பேரரசன்.நம் பெருமைகளை உலகறிய செய்திருந்தாலும் பிற மத நம்பிக்கைகளை புண்படுத்தாத ;பிற மத வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமிக்காத பெருமைக்கு உரியவன்.இப்படி பல பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழ் திரைஉலகத்தில் ராஜராஜ சோழன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து தமிழ் மக்களிடம் காட்சிப்படுத்தினார்.வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசும் மன்னராக இருந்தாலும் தமிழ் கடவுள் முருகப் பெருமானை போற்றி வணங்கிய ஒரு பேரரசன்.அவரை தமிழ் திரையுலகம் உயர்வாக காட்சிப்படுத்தியது. இன்றளவும் பெருமைப்படுத்தி கொண்டு வருகிறோம்
ஆனால் தெலுங்கு திரையுலகில் people media Factory அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் படக்குழு-ஹஷீத் கோலி-எழுத்து இயக்கத்தில் ஸ்ரீவிஷ்ணு நடிப்பில்வெளிவரவுள்ள “ராஜராஜ சோரா” என்ற திரைப்படம் பெருமைமிக்க ராஜராஜ சோழனைகாமெடியன் போலவும் ;திருடன் போலவும் காட்சிப் படுத்துவதாக முன் காட்சி படம்- டீசர் வெளியாகி இருக்கிறது. தமிழ் சமுதாயத்தின் உடைய அடையாளம் ;தமிழர் ஆட்சி முறையின் உதாரண நாயகன் ராஜராஜ சோழன் அவரை கேலிப் பொருளாக மாற்றி திரைப்படத்தில் ஆவணப்படுத்த முயற்சிக்க கூடிய கருத்தியல் உருவாக்கத்திற்கு கடுமையான கண்டனங்களை இந்து தமிழர் கட்சியின் சார்பில் பதிவு செய்து கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் அமைப்புகளும் திரைப்படத் துறையினரும் ராஜராஜ சோழனை அவமதித்து எடுக்கும் படத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறோம். தமிழக அரசு உடனடியாக இதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.மத்திய தணிக்கை குழு அதிகாரிகள் ஆட்சேபிக்க தகுந்த காட்சிகளை நீக்க வேண்டும்.அதுமட்டுமல்லாது
தமிழ்நிலத்தில் மாமன்னனை அவமானபடுத்துவதால் மொழி ரீதியான பிரச்சினைகள் உருவாகாமல் தடுத்திடமுன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்து தமிழர் கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கிறோம்.
“நாங்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல ;அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்கின்ற பெயரில் வரலாறுகளை திரித்து, எங்கள் மாமன்னர் பெருமக்களை அவமானப்படுத்தி; அதை ஆவணப்படுத்த முயற்சிக்கின்ற போக்கை நாங்கள் என்றும் எதிர்ப்போம்.மாமன்னன் ராஜராஜ சோழன் மீது பக்தி கொண்ட அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த “ராஜராஜ சோரா” என்றதிரைப்பட குழு செய்யும் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.- இராமஇரவிக்குமார் இந்துதமிழர்கட்சி நிறுவனதலைவர்
https://www.facebook.com/profile.php?id=100008354683191