கடந்த ஜூன் 30 தேதி கேரளா இடுக்கி மாவட்டத்தில் 6 வயது சிறுமி கழுத்து இறுக்கிய நிலையில் உயிர் இழந்த சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கைது செயப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கொடுஞ்செயலில் ஈடுபட்ட அர்ஜுனன் காவல்துறையினர் நேரடி வாக்குமூலத்தில் இதை தெரிவித்துள்ளான்.
கேரளா இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம்தேதி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான பெற்றோரின் 5 வயது குழந்தை வீட்டில் வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிறு இறுக்கி இறந்தநிலையில் மீட்கப்பட்டது. பின் உடற்கூறு ஆய்வில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரித்த காவல்துறையினர், அந்த குடும்பத்துடன் நட்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) இளைஞர் பிரிவுத் தலைவர் அர்ஜூனன் என்ற 29 வயது நபரை கைது செய்தனர்.
விசாரணையில், ஐந்து வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததை அர்ஜூனன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்றும், சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியபோது இறந்துவிட்டதால், வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றியபிறகு குழந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று சாதாரணமாக பழகியுள்ளார். அர்ஜூனனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடங்களுக்கு அழைத்துச்சென்று அவரது வாக்குமூலத்தை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்தனர்.
போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட அர்ஜூன், தொடுபுழா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.