உத்தரப்பிரதேசத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு நிறைவேற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவிலான பழங்கள் மட்டுமே இருப்பதால் மக்கள் தொகை கட்டுப்படுத்தி அதை உறுதிப்படுத்த வேண்டிய பணி அம்மாநில அரசுக்கு உள்ளது.
எனவும் அதன்படி மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்களும் முன்வந்து உதவி ஊக்குவிக்க வேண்டும் என உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு யோகி தலைமையிலான அரசு கொண்டுவரவுள்ள. இச்சட்டத்தை குறித்து மக்களிடையே பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால்:-
மாநில அரசின் எல்லாத் திட்டங்களும் இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு குறைவான குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு மட்டுமே சேரும் எனவும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் அரசின் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செல்லாது எனவும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பவர்களுக்கும் இது பொருந்தும். எனவும் அதே போல் மாநில அரசு பணி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள நபர்களுக்கு வழங்கப்படாது .
எனவும் அதேபோல் அரசு பணியில் உள்ள பணியாட்களுக்கு 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் பதவி உயர்வு மற்றும் எந்த ஒரு மாநிலமும் கிடைக்காது எனவும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சட்ட வரைவு மசோதாவால் மக்களுக்கு சிறந்த நல்ல முன்னேற்றம் மற்றும் வசதிகள் கிடைக்கும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார் .
அதேபோல் வறுமை மற்றும் கல்வி அறிவின்மை ஆகியவை மக்கள் விவரிக்கும் அதற்கு முக்கிய காரணிகள் என்று சில சமூகங்களில் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்களின் நலனுக்காக இந்த சட்டம் கட்டாயம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழகத்திலும் இந்த சட்டம் வர வாய்ப்பு உள்ளதா ?