2017 ஆம் ஆண்டு சிஸ்டம் சரியில்லை தமிழ் மக்களுக்காக உயிரை தருவேன் என நான் அரசியலுக்கு வருவேன் என தடாலடியாக அறிவித்தார் ரஜினி. அவரை நம்பி தமிழருவி மணியன் மற்றும் பல பிரபலங்கள் ரஜினி கட்சியில் சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில் இருந்தார்கள்.
டிசம்பர், 2017ல் அரசியலுக்கு வருவேன் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக, 2020ல் அதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கவில்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் தனது உடல்நிலை காரணமாகவும் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். மேலும், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும் தெரிவித்தார்.
ரஜினியை தூண்டியது பாஜக என்றார்கள் ஆனால் ரஜினியின் பின்வாங்கல் முடிவை பாஜகவால் தடுத்திருக்க முடியாதா? நிச்சயம் முடிந்திருக்கும் ரஜினியை பாஜக இயக்கவில்லை என தெளிவாக தெரிந்தது. மேலும் ரஜினி பின்வாங்கலுக்கு முன்னர் பின் ஏன் ரஜினி “முடிவை அறிவித்தார்.?
திமுகவின் தூண் – “நிதி”க்கள் அண்ணாத்தே – பட தயாரிப்பாளர் யார்? கலாநிதிமாறன் ஐதராபாத்துக்கு அழைத்து 5 நாள் “நாடகம்” நடத்தி Blood Pressure காரணம் சொல்லி முதல் எபிசோடு திமுகவால் முடித்து வைக்கப்பட்டது. இம்முறை ஜெயிக்காவிட்டால் அதோகதிதான் என்னும் நிலையிலுள்ள திமுக- ரஜினி வரவை-விரும்பவில்லை.எனவே ரஜினி பின்வாங்கினார் என்ற செய்திகள் பரவியது.
அமெரிக்காவில் சிகிச்சை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். அரசியலுக்கு வருவதாகச் சொன்ன நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று நோய் மற்றும் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிவித்த பிறகு, தனது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போயஸ் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது : “மக்கள் மன்றத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா? இல்லையா? என்பது பற்றி ஆலோசனை மக்கள் மன்றத்தின் எதிர்காலப் பணிகள் என்ன என்று கேள்விகள் உள்ளன எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்கிற கேள்வியும் உள்ளது அனைத்து கேள்விகளுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்” – என கூறினார் நடிகர் ரஜினிகாந்த்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















