கல்வி பள்ளிகளில் சில காலமாக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில பிரிவினைவாதிகள் உணர்ச்சி பொங்க பேசி மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றனர். முக்கியமாக இந்த கலாச்சாரம் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தான் ஆரம்பிக்கப்படுகிறது. அதை அரசியலாக்கி சில கட்சிகள் குளிர் காய்கின்றனர். அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் செய்வதற்கு எதிராக கேரளாவை சேர்ந்த 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . இந்த விசாரணையில் பொது போராட்டங்களால் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படக் கூடாது. எனவும் கல்லூரிகள் படிப்பதற்கான இடம் மட்டுமே, போராட்டம் செய்வதற்கு அல்ல. கல்வி நிறுவன வளாகங்களில் எந்த பேரணியோ அல்லது போராட்டமோ நடத்தக் கூடாது; யாரையும் போராட்டத்திற்கு தூண்டக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து மேலும் நீதிபதி கூறியது : போராட்டங்களினால் மற்றவர்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது. கல்லூரி வளாகங்களில் அமைதியான முறையில் ஆலோசிக்கலாம் அல்லது கருத்துக்களை எடுத்துரைக்கலாம். நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் ஏதாவது நடந்தால், கல்வி நிறுவன நிர்வாகம்எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம். காவல்துறையினரை அழைத்து, அமைதியை நிலைநாட்டலாம் எனவும் இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.