தமிழகத்தில் திமுக அரசு ஸ்டாலின் தலைமையில் பதவியேற்று 70 நாட்கள் தான் ஆகிறது. ஆனாலும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வந்த நூறு நாட்களில் அனைத்து பிரச்சனைக்ளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன் என முதல்வர் ஸ்டாலின் அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சகோதரி கனிமொழி அவர்கள் பிரச்சாரங்களில் முழக்கமிட்டார்கள். ஆனால் அது முடியவில்லை. அதனால் தான் கேள்விகள் எழுகிறது. திமுக மக்களைஏமாற்றும் விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசியது எல்லாம் தற்போது திமுக அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது.
தினமும் ஒரு பிரச்சனைகள் திமுகவிற்கு எதிராக நிற்கிறது. முக்கியமாக நீட் தேர்வுதான் அவர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. திமுகவனின் பிரச்சாரத்தின் போது முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் 100 நாட்களில் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது என அனைத்து பிரச்சார மேடைகளிலும் திமுக பேசிவந்தது. , தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுத்தான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல் அமைச்சருமான ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களுடைய இளைஞரணி செயலாளர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில் பேசினார்கள்.
ஆனால் இந்த வருடம் நீட் தேர்வு நடைபெறும் என்பதை ஸ்டாலின் அவர் இந்த ஆண்டு நீட் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் நீட் தேர்வை விலக்கு பெறும் சட்ட நடவடிக்கை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால் அந்த பிரச்சனை முடிவதற்குள் மின்வெட்டு பிரச்னை தலைதூக்கி உள்ளது தமிழகத்தில் மாநிலம் முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டு. தற்போது கிராமப்புறங்களில் தினமும் 3 முதல் 5 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மின்வெட்டுக்கு முக்கிய காரணம் அணில்கள்தான் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக இல்லாத இந்த அணில்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தது மட்டும் எப்படி தெரிந்தது? என்று இதை நெட்டிசன்கள் கலாய்த்தனர். சரி, சென்னை நகரில் புதைவட கம்பிகள் மூலம் தானே, மின் விநியோகம் நடக்கிறது? அங்கே எப்படி தொடர்ந்து மின்தடை? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் கேள்வியை முன்வைத்தார்.
அடுத்து மக்களுக்கு ஷாக் கொடுத்த்துள்ளது தமிழக மின்சாரவாரியம் இது மின்தடை இல்லை மின்கட்டணம் மின்சாரத்தில் கை வைத்தால் அடிக்கும் ஷாக் போன்று இருக்கிறது மின்கட்டணம். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மாதாமாதம் மின்பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி தரப்பட்டது. 2 மாதத்துக்கு ஒருமுறை அளவீடு செய்யும்போது ‘சிலாப்’ மாறுவதால் மின் கட்டணம் அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு. அதையே மாதாமாதம் அளவீடு செய்தால் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மாதம் தோறும் 150 முதல் 200 ரூபாய் மிச்சமாகும் என்ற நம்பிக்கை மக்களிடம் எழுந்திருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை அதுக்கும் மேல ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆம் மின்சாரக்கட்டணம் மும்மடங்கு, நான்கு மடங்கு என கூடுதலாக செலுத்தும் பரிதாப நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். என்ற செய்திகள் வந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் கடந்த ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலால் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று அளவீடு செய்யாததுதான்.இதனால் ஒரு வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை 750 ரூபாய் மின் கட்டணம் வருகிறதென்றால் அது பெரும்பாலான வீடுகளில் அப்படியே இரு மடங்காகிவிட்டிருக்கிறது. இன்னும் பலரது வீடுகளில் இந்த கட்டணம் மும்மடங்காகி 2,500 ரூபாயை தொட்டிருக்கிறது.
அலுவலகங்கள், கடைகள் வைத்திருப்பவர்களுக்கு இன்னும் பலத்த அதிர்ச்சி. கொரோனா பரவலின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 45, 50 நாட்களுக்கு எந்தக் கடையும், அலுவலகமும் திறக்கப்படவில்லை. அப்படி இருந்தும் 25 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்தவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 75 ஆயிரம் ரூபாய் செலுத்தியவர்களுக்கு,1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தும்படி தகவல் வந்திருக்கிறது.
இதற்கு காரணம் கொரானா இரண்டாம் அலையில் போடப்பட்ட ஊரடங்கு தான் காரணமாகும்.என அரசு தரப்பு விளக்கினாலும் கடந்த ஆண்டும் ஊரடங்கு இருந்தபோது மின் கட்டணம் நார்மலாக தான் இருந்தது. அதுவும் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக ஆட்சியில் தலைகீழாக மாறியுள்ளது. செலுத்தவேண்டிய மின்கட்டணம் 4 மடங்கு செலுத்த சொல்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வேலை கூட செலவில்லை கரண்ட் பில் எப்படி கட்டுவது என மக்கள் புலம்பி வருகிறார்கள்.
இந்த கொடுமை ஒரு பக்கம் இருக்க, இன்னொருபுறம், கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தி இருப்பதாக கூறி, பல வீடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் வரை வைப்புத்தொகை கட்டும்படி மின்வாரியம் தகவல் அனுப்பி, நுகர்வோரின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது.இப்படி அடுத்தடுத்து மின்சார வாரியம் அளித்திருக்கும் அதிர்ச்சியால் தமிழக மக்கள் அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















