சமீபத்தில் டில்லி சென்றிருந்த தமிழக ஆளுநர் அவர்கள் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தது பேசினார். இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து தக்வல்கள் பிரதமர் மோடியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்தமிழகத்தில் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் பதவி காலம் நிறைவடைந்து என்பதும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளார்’ என்பதும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து முன்னேரே இந்த வழக்கின் முக்கிய பிரச்சனைகள் பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து பிரதமர் மோடியின் மேசையில் வைத்து விட்டார் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ‘முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல. என குறிப்பிட்டுள்ளார்.
ஏன் என்றால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது.’எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது. பரோலில் வேண்டுமானால் சில காலம் அவர்கள் வெளியே இருக்கலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளதாம்.