பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமான அசோ ஷெர்பா ரபேல் ஊழல் பற்றி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் 2018 முதல் இந்த போலி சிக்கலை உருவாக்க முயற்சிக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் அவர்கள் 2 வது முறையாக முயற்சி செய்தார்கள், ஆனால் அவர்களின் போலி கோரிக்கையை பிரெஞ்சு ஊழல் தடுப்பு அமைப்பு கருத்தில் கொள்ளவில்லை. இப்போது, அவர்கள் மீண்டும் முயற்சிப்பது இது மூன்றாவது முறையாகும்.
இந்த வழக்கை எந்த பிரான்ஸ் நீதிபதியும் தானக கையில் எடுக்கவில்லை. அசோ ஷெர்பாவின் புகார் உண்மையா என்றே விசாரித்துள்ளனர். பிரஞ்ச் நீதிபதிகளே இந்த வழக்கை விசாரிக்க முடிவெடுத்துள்ளனர் என்பது மிகப்பெரிய பொய். அசோ ஷெர்பா கடந்த காலங்களில் பல ஆபிரிக்க நாடுகளில் பணத்திற்காக “தலையிடுவதாக” குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பல ஊடக செய்திகள் வெளிவந்துள்ளன. இதைப்போல ரபேல் விவகாரத்திலும் ஈடுபட்டிருக்கலாம் அல்லவா? https://timesofindia.indiatimes.com/…/arti…/66776993.cms
தன்னார்வ தொண்டு நிறுவனமான அசோ ஷெர்பாவுக்கு இங்கிலாந்தை மையமாகக் கொண்ட சிக்ரிட் ரவுசிங் டிரஸ்ட் என்ற அமைப்பு இவர்களுக்கு நிதியளிக்கிறது. 2013 க்குப் பிறகு அசோ ஷெர்பா ஆண்டு அறிக்கைகளைப் புதுப்பிக்கவில்லை.
சிக்ரிட் ரோஸிங் டிரஸ்ட் ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷனைப் போன்றது, இங்கிலாந்து முழுவதும் ஜனநாயகத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் அதி தீவிர இடதுசாரி கொள்கைக் கொண்ட அமைப்புகளுக்கு நிதியளிக்கிறது.
இந்த அமைப்பு பிரிட்டனில் உள்ள இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களான அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு நன்கொடை வழங்குகிறது. இந்தியாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இதே போன்ற பல தீவிர இடது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி தருகிறார்கள். அம்னஸ்டி மற்றும் அசோ ஷெர்பா ஆகியோர் பிரான்சில் கூட்டாக வேலை செய்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள சர்வதேச இடதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதற்கு பின்னால் உள்ளன என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.