நேற்று வெளியான சார்பட்டா பரம்பரை குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் நேற்றைய தினம் ஒடிடி தளமன அமேசான் ப்ரைம் வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்து வருகின்றன. ஒரு பீரியட் படத்தை சரியாகவும், கதாபாத்திரங்களுக்கான நல்ல தேர்வையும் ரஞ்சித் செய்திருக்கிறார். மேலும் எமெர்ஜெண்சி காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் இடியாப்ப பரம்பரை க்கும் சர்பட்டா பரம்பரைக்கும் நடக்கும் குத்துச்சண்டையில் யார் வெற்றி பெறுவது என்பது தான் கதை. இடியாப்ப பரம்பரையில் யாராலும் வீழ்த்த முடியாத குத்துச்சண்டை வீரராக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேன் வேம்புலி என்பவர் நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்தவர் ‘பாகுபலி 1, வீரம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் ‘வேம்புலி’ என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவை மிஞ்சும் வகையில் இவரது நடிப்பு அமைந்துள்ளதாக பலரும் பேசிவருகிறார்கள். பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் வேம்புலி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கு நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது : “நன்றி அஜித் சார். என்னை நானே நம்புவதற்கு தல அஜித் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பார். ‘வீரம்’ படத்தின் போது உங்களுடன் செலவிட்ட நாட்கள் எனது வாழ்க்கைக்குப் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கவும், சிறந்த மனிதனாக இருப்பதற்கும் நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறீர்கள். ‘வேம்புலி’ கதாபாத்திரத்தை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















